25.6 C
Jaffna
December 23, 2024
Pagetamil
உலகம்

விண்வெளிக்கு சுற்றுலா போக ரெடியா?ஒரு டிக்கெட் விலை ரூ.1 கோடி- அமெரிக்க நிறுவனம் அறிவிப்பு!

அமெரிக்க நிறுவனம் ஒன்று விண்வெளி சுற்றுலாவுக்கு டிக்கெட் விற்பனை செய்யத் துவங்கி உள்ளது.

அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தைச் சேர்ந்த ‘ஸ்பேஸ் பெர்ஸ்பெக்டிவ்’ என்ற நிறுவனம் பிரமாண்ட பலுானில் மனிதர்களை விண்வெளிக்கு அழைத்துச் சென்று பூமியின் அழகை ரசிக்கும் வாய்ப்பை அளிக்க உள்ளது. இது குறித்து இந்த நிறுவனத்தைச் சேர்ந்த ஜேன் பான்ட்டர் கூறியதாவது,

பிரம்மாண்ட பலுானில் விண்வெளி சுற்றுலாவுக்கு மக்களை அழைத்துச் செல்லும் வர்த்தகத்தில் இறங்கியுள்ளோம். 6 மீட்டர் பலுானை ஹீலியம் வாயு வாயிலாக ஒரு கால்பந்து மைதானத்தின் விட்டத்திற்கு விரிவுபடுத்தி, விண்ணில் செலுத்துகிறோம். சமீபத்தில் ஆளில்லாமல் அனுப்பிய பலுான் வெற்றிகரமாக, 1 லட்சம் மீட்டர் உயரம் பறந்து, பத்திரமாக தரையிறங்கியது.

இதைத் தொடர்ந்து மனிதர்களை பலுானில் விண்வெளிக்கு அழைத்துச் செல்ல உள்ளோம். ஆறு மணி நேர பயணத்திற்கு ஒரு டிக்கெட் விலை 1 கோடி ரூபாய் என நிர்ணயித்துள்ளோம். ஒரு பயணத்தில் கேப்டன் உட்பட எட்டு பேர் மட்டுமே பயணிக்க முடியும். டிக்கெட் பதிவு துவங்கிய சில நிமிடங்களில் 300 பேர் பணம் செலுத்தி விட்டனர். அதனால் 2024ம் ஆண்டு வரை சுற்றுலா பயணத்திற்கான பதிவு முடிந்து விட்டது.

2025ம் ஆண்டுக்கான முன்பதிவு தற்போது துவங்கியுள்ளது. இந்த பலுானில் ஒவ்வொருவருக்கும் தனித் தனி அறைகள் உள்ளன. விண்ணில் இருந்து பூமியை தெளிவாக பார்த்து ரசிக்கும் வகையில் தொழில்நுட்ப வசதிகள் அமைக்கப்பட்டுள்ளன. இணையம் வாயிலாக பூமியில் உள்ள உறவினர்களுடன் நேரடியாக பேசும் வசதியும் உள்ளது. இந்த திட்டம் சுற்றுலா ஆர்வலர்களுக்கு புதிய அனுபவத்தை அளிக்கும்.இவ்வாறு அவர் கூறினார்

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

ஜனாதிபதியாக இருந்தால்தான் கணவன்: சிரியாவிலிருந்து தப்பியோடிய ஆசாத்திடமிருந்து விவாகரத்து கோரும் மனைவி!

Pagetamil

உகண்டாவை உலுக்கும் டிங்கா டிங்கா வைரஸ்: இந்த வைரஸ் தொற்றினால் தொடர்ந்து நடனமாடிக் கொண்டேயிருப்பீர்கள்!

Pagetamil

நேபாளத்தை உலுக்கிய நிலநடுக்கம்!

east tamil

பிரான்ஸை உலுக்கிய பாலியல் வல்லுறவு வழக்கு: சொந்த மனைவியை கொடூரமான பாலியல் துன்புறுத்தலுக்குள்ளாக்கிய கணவன், 50 ஆண்களுக்கு சிறைத்தண்டனை!

Pagetamil

துரோகம் செய்த காதலி கொடுத்த பணத்தை திருப்பிக் கொடுக்கத் தேவையில்லை: காதலனுக்கு ஆதரவாக நீதிமன்றம் தீர்ப்பு!

Pagetamil

Leave a Comment