25.4 C
Jaffna
January 18, 2025
Pagetamil
உலகம்

கோவிஷீல்டு தடுப்பூசிக்கு அனுமதி வழங்க மறுத்த ஐரோப்பிய யூனியன்..

ஐரோப்பிய நாடுகளில் உள்ள கோவிஷீல்ட் தடுப்பூசியை செலுத்திக் கொண்டவர்கள், ஐரோப்பிய யூனியனின் பிற நாடுகளுக்கு பயணம் செய்வதில் தற்போது சிக்கல் ஏற்பட்டுள்ளது.

ஐரோப்பிய நாடுகளில் உள்ள கோவிஷீல்ட் தடுப்பூசியை செலுத்திக் கொண்டவர்கள், ஐரோப்பிய யூனியனின் பிற நாடுகளுக்கு பயணம் செய்வதில் தற்போது சிக்கல் ஏற்பட்டுள்ளது. ஐரோப்பிய நாடுகளுக்கு மக்கள் எளிதாக பயணம் மேற்கொள்ள கிரீன் பாஸ் என்ற நடைமுறையை கடைபிடிக்கப்படுகிறது. கொரோனா தடுப்பூசி செலுத்தியவர்கள் கிரீன் பாஸ் சான்றிதழ் உடன் ஐரோப்பிய யூனியம் நாடுகளில் ஒரு நாட்டில் இருந்து இன்னொரு நாட்டிற்கு சுலபமாக சென்று வரலாம்.இந்நிலையில் ஐரோப்பிய ஒன்றியத்திற்கான ஐரோப்பிய மருந்துகள் அமைப்பு இந்தியாவில் சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா நிறுவனத்தால் தயாரிக்கப்படும் கோவிஷீல்டு தடுப்பூசிக்கு கிரீன் பாஸ் அங்கீகாரம் வழங்கவில்லை.

இதனால் குறிப்பாக ஐரோப்பிய நாடுகளில் பணியாற்றும் இந்தியர்கள் கோவிஷீல்ட் தடுப்பூசியை போட்டுக் கொண்டால் அவர்கள் ஐரோப்ப்பிய நாடுகளுக்குள் பயணம் செய்வதில் சிக்கல் நீடிக்கிறது. இந்நிலையில், இந்த விவகாரத்தை உயர் மட்ட அளவில் எடுத்துச் செல்வேன் என சீரம் இன்ஸ்டிடியூட் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ஆதார் பூனாவாலா உறுதி அளித்துள்ளார்.இங்கிலாந்தில் தயாரிக்கப்படும் வேக்ஸேவ்ரியா, அமெரிக்காவின் பைசர், மாடர்னா, ஜான்சன் அண்டு ஜான்சன் ஆகிய நான்கு தடுப்பூசிகளுக்கு மட்டுமே அங்கீகாரம் வழங்கியுள்ளது. இதனால் சீரம் இன்ஸ்டிடியூட் இந்தியா தயாரித்த தடுப்பூசிகளை போட்டுக்கொண்ட ஐரோப்பிய யூனியன் நாடுகளைச் சேர்ந்தவர்கள் தங்கள் நாட்டில் இருந்து ஐரோப்பிய யூனியனில் உள்ள மற்ற நாடுகளுக்கு செல்ல முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

ஈரான் மீது தாக்குதல் நடத்தும் இஸ்ரேல் திட்டங்களை கசிய விட்ட சிஐஏ ஊழியர் கைது!

Pagetamil

இம்ரான் கானுக்கு 14 வருட சிறைத்தண்டனை

Pagetamil

காட்டுத்தீயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு டெய்லர் பிரிட்ஸின் நிதியுதவி

east tamil

உரிமையாளருக்காக 2 மாதங்கள் காத்திருக்கும் நாய்

Pagetamil

கைதிகள் துணையுடன் உறவு கொள்ள சிறைச்சாலைகளுக்குள் ‘காதல் அறைகள்’: இத்தாலி உச்ச நீதிமன்ற தீர்ப்பால் ஏற்படும் மாற்றம்!

Pagetamil

Leave a Comment