கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 41 பேர் கொரோனா தொற்றினால் உயிரிழந்துள்ளனர்.
இலங்கையில் இதுவரை பதிவான கொரோனா உயிரிழப்புக்களின் எண்ணிக்கை 2,985 ஆக அதிகரித்துள்ளது .
உயிரிழந்தவர்களில் 24 ஆண்களும் 17 பெண்களும் அடங்குவர்.
உயிரிழந்த ஆண்களில் 20 பேர் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள், மூன்று பேர் 30 முதல் 59 வயதுக்கு உட்பட்டவர்கள், ஒருவர் 30 வயதுக்குக் குறைவானவர்கள்.
பெண்களில் 13 பேர் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள், மூன்று பேர் 30 முதல் 59 வயதுக்கு உட்பட்டவர்கள் மற்றும் ஒருவர் 30 வயதுக்குக் குறைவானவர்கள்.




