24.1 C
Jaffna
January 6, 2025
Pagetamil
சினிமா

அமெரிக்கா செல்ல ரஜினிகாந்துக்கு மட்டும் எப்படி அனுமதி கிடைத்தது? – நடிகை கஸ்தூரி கேள்வி!

நடிகர் ரஜினிகாந்த் கடந்த ஜூன் 19 மருத்துவ பரிசோதனைக்காக தனி விமானத்தில் அமெரிக்கா சென்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

ரஜினிகாந்த் அமெரிக்கா சென்றது குறித்து நடிகை கஸ்தூரி தனது டுவிட்டர் பதிவில் கூறி இருப்பதாவது: “மே முதல் அனைத்து இந்திய குடிமக்களுக்கும் கொரோனா காரணமாக இந்தியாவில் இருந்து நேரடி பயணத்தை அமெரிக்கா தடை செய்துள்ளது. மருத்துவ விதிவிலக்குகள் எதுவும் வழங்கப்படவில்லை.

பிறகு எப்படி, ஏன் இந்த நேரத்தில் ரஜினிகாந்த் பயணம் செய்தார்? அவர் திடீரென அரசியலில் இருந்து விலகியது, இப்போது இது என எதுவும் சரியாகப் படவில்லை. ரஜினி சார் தயவு செய்து தெளிவுபடுத்துங்கள்.

தெளிவுபடுத்த வேண்டும் என்று கேட்க காரணம் இருக்கிறது. ஏனெனில் அமெரிக்காவில் பணிபுரியும் இந்தியர்கள் அல்லது படிக்கும் இந்தியர்களுக்கு மட்டுமே அமெரிக்காவுக்குத் திரும்ப அனுமதிக்கப்படுகிறது. அதுவும் மற்ற நாடுகளின் வழியாக பயணிக்கும் இந்தியர்கள் பயணம் செய்ய அனுமதிக்கப்படுகிறார்கள்.

எனவே ரஜினி பயண பிரச்சினை நிச்சயமாக ஒரு மர்மமாகும். ரஜினி இந்திய அரசிடம் இருந்து மருத்துவ விலக்கு பெற்றிருக்கலாம் என்று பலர் கூறுகிறார்கள். இது இன்னும் கவலை அளிக்கிறது. இந்தியாவின் சிறந்த மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்க முடியாத அளவிற்கு அவரது உடல் நிலையில் என்ன பாதிப்பு ஏற்பட்டுள்ளது? அவர்கள் வழக்கமான பரிசோதனை என்று சொன்னார்கள்

மயோ கிளினிக் இருதய பராமரிப்புக்கு பெயர் பெற்றது. நான் இதைப் பற்றி அதிகம் நினைக்க நினைக்க இது இன்னும் மோசமானதாக தோன்றுகிறது. மேலும் ரசிகர்களே, தயவுசெய்து ‘ரஜினிகாந்திற்கு விதிகள் பொருந்தாது’ போன்ற விஷயங்களைச் சொல்ல வேண்டாம்.

அப்படி ஏதேனும் இருந்தால், அத்தகைய மிகப்பெரிய ஐகான்கள் சட்டத்தை மதிக்கும் குடிமகனாக வருவதற்கு மிகவும் கவனமாக இருக்க வேண்டும்”. இவ்வாறு நடிகை கஸ்தூரி தனது டுவிட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

சாக்‌ஷி அகர்வால் திருமணம்!

Pagetamil

12 ஆண்டு பிரச்சினை தீர்ந்து வெளியாகிறது மதகஜராஜா

Pagetamil

பொங்கல் ரேஸில் இருந்து விலகியது ‘விடாமுயற்சி’

Pagetamil

மறைந்த சின்னத்திரை நடிகை சித்ரா தந்தை தற்கொலை

Pagetamil

சல்மான் கான் மீது காதல்: நினைவு கூர்கிறார் சுஷ்மிதா சென்

Pagetamil

Leave a Comment