26.6 C
Jaffna
January 7, 2025
Pagetamil
சினிமா

சாண்டி மாஸ்டர் நடிக்கும் 3:33; திகில் ஏற்படுத்தும் டீசர்

தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் மற்றும் திரைப்படங்களில் நடன இயக்குநராகப் பணிபுரிந்து வருபவர் சாண்டி. இவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராகக் கலந்துகொண்டார். அதில் அவருக்கென தனி பாணியில் பேச்சு, நகைச்சுவை என கவனம் ஈர்த்தார். அவருக்கான ஒரு ரசிகர் பட்டாளம் உருவாகியது.

நடன இயக்குநராக இருந்த சாண்டி (Sandy Master) தற்போது நாயகனாக 3:33 (மூணு முப்பத்தி மூணு) என்ற படத்தில் நடித்து வருகிறார். காலப் பயணம் சார்ந்த திகில் படமாக இந்த படம் தெரிகிறது. இந்தப் படத்தின் ஒளிப்பதிவாளராக சதீஷ் மனோஹரன் பணியாற்றுகிறார். ரேமண்ட் டெரிக் க்ராஸ்டா படத்தொகுப்பு செய்ய ஹர்ஷவர்த்தன் ராமேஷ்வர் இசையமைக்கிறார். பாம்பூ ட்ரீஸ் ப்ரொடக்‌ஷன்ஸ் சார்பாக ஜீவிதா கிஷோர் தயாரிக்கிறார்.

அறிமுக இயக்குநர் நம்பிக்கை சந்துரு இயக்கியிருக்கும் இந்தப் படத்தில் மற்றொரு பிக்பாஸ் போட்டியாளரான சரவணன், ரேஷ்மா இதில் நடித்துள்ளனர். இவரோடு ரமா, ஸ்ருதி, மைம் கோபி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். மேலும் இந்த படத்தில் இயக்குனர் கவுதம் வாசுதேவ் மேனன் ஒரு முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் விரைவில் 3:33 திரைப்படம் திரையரங்குகளில் ரிலீஸாகும் என்று கூறப்படும் நிலையில் தற்போது இந்த படத்தின் டீஸர் வெளியாகி உள்ளது. இந்த படத்தின் டீசரில் சாண்டியின் திகில் காட்சிகள் இடம்பெற்றுள்ளன என்பதும் இந்த டீசரில் இருந்து இது ஒரு அட்டகாசமான பேய் படமாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

வாழ்க்கையை சீரழித்து விட்டார்: இயக்குனர் மீது நடிகை புகார்

Pagetamil

“நான் சினிமாவுக்குள் வந்ததே சிலருக்கு பிடிக்கவில்லை” – சிவகார்த்திகேயன்

Pagetamil

அஜித்தின் ‘குட் பேட் அக்லி’ ஏப்ரல் 10இல் ரிலீஸ்

Pagetamil

நடிகர் விஷாலுக்கு உடல்நல பாதிப்பு – பிரச்சினை என்ன?

Pagetamil

சாக்‌ஷி அகர்வால் திருமணம்!

Pagetamil

Leave a Comment