உலக அளவில் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டோர் எண்ணிக்கை அதிகம் கொண்ட நாடுகளின் பட்டியலில் இதுவரை அமெரிக்க முதலிடத்தில் இருந்தது. தற்போது அந்த சாதனையை முறியடித்து அமெரிக்காவை 2-ம் இடத்துக்கு இந்தியா தள்ளியுள்ளது.
உலகம் முழுவதும் கொரோனா பரவலைத் தடுக்க தடுப்பூசிகள் முக்கிய ஆயுதமாகப் பயன்படுகின்றன. அந்த வகையில் தொற்றிலிருந்து காத்துக் கொள்ளவும், கொரோனாவின் அடுத்தடுத்த அலைகளிலிருந்து தங்களைக் காத்துக் கொள்ளவும் உலக நாடுகள் கொரோனா தடுப்பூசி செலுத்துவதைத் தீவிரப்படுத்தி வருகின்றன.
இந்தநிலையில் உலக அளவில அதிகமாக தடுப்பூசி செலுத்தியோர் எண்ணிக்கையில் இந்தியா முதலிடம் பிடித்துள்ளது. மக்கள்தொகையின் அடிப்படைகள் அதிக அளவில் கொரோனா தடுப்பூசியை செலுத்திய முதல் நாடுகளின் விவரத்தை மத்திய சுகாதார அமைச்சகம் இன்று வெளியிட்டுள்ளது. அதில் தெரிவிக்கப்பட்டுள்தாவது:
புதிய கொவிட்-19 தடுப்பூசி திட்டம் 2021 ஜூன் 21ம் திகதி தொடங்கியது. நாடு முழுவதும் கொவிட் தடுப்பூசி போடப்படும் வேகத்தை அதிகரிக்கவும், அளவை விரிவுபடுத்தவும் மத்திய அரசு உறுதிபூண்டுள்ளது.
நாட்டில் கொவிட் தடுப்பூசி போடப்பட்டவர்களின் எண்ணிக்கை 32 கோடியை கடந்துள்ளது. குறிப்பிடத்தக்க முன்னேற்றமாக மொத்த தடுப்பூசிகளின் எண்ணிக்கை நேற்று 32 கோடியை கடந்தது. 32,36,63,297 கோவிட் தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன. உலக அளவில் இது முதலிடமாகும்.
உலக அளவில் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டோர் எண்ணிக்கை அதிகம் கொண்ட நாடுகளின் பட்டியலில் இதுவரை அமெரிக்க முதலிடத்தில் இருந்தது. தற்போது அந்த சாதனையை முறியடித்து அமெரிக்காவை இந்தியா 2-ம் இடத்துக்கு தள்ளியுள்ளது.
அமெரிக்காவில் இதுவரை 32,33,27,328 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. அதேசமயம் தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கையை அமெரிக்கா டிசம்பர் 14-ம் திகதியே தொடங்கியது. இந்தியாவில் ஜனவரி 16-ம் திகதிதான் தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
உலக அளவில் அதிகமாக கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்ட நாடுகளின் பட்டியலில் மூன்றாவது இடத்தில் பிரிட்டனும், நான்காவது இடத்தில் ஜெர்மனியும் உள்ளன. பிரான்ஸ் 5-வது இடத்திலும் இத்தாலி 6-வது இடத்திலும் உள்ளன. இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.