நேற்று (26) மேலும் 39 பேர் கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழந்துள்ளனர்.
இலங்கையின் COVID-19 தொடர்பான உயிரிழப்பு எண்ணிக்கை 2,944 ஆக அதிகரித்துள்ளது என்று அரசு தகவல் துறை தெரிவித்துள்ளது.
நேற்று உயிரிழந்தவர்களில் 27 ஆண்களும் 12 பெண்களும் அடங்குவர்.
உயிரிழந்த ஆண்ககளில் 17 பேர் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள், ஒன்பது பேர் 30 முதல் 59 வயதுக்கு உட்பட்டவர்கள் மற்றும் ஒருவர் 30 வயதுக்கு கீழ்ப்பட்டவர்.
பெண்களில், ஒன்பது பேர் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள், மூன்று பேர் 30 முதல் 59 வயதுக்கு இடைப்பட்டவர்கள்.




