பாண்டிராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்து வரும் சூர்யா 40 படம் கொரோனா லாஃடவுன் பிரச்சனையால் படப்பிடிப்பு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
மீண்டும் படப்பிடிப்புகளை நடத்த தமிழக அரசு அனுமதி அளித்திருக்கிறது. இதையடுத்து ஜூலை 1 மீண்டும் படப்பிடிப்பை துவங்கி, ஆகஸ்ட் மாத இறுதிக்குள் அனைத்து காட்சிகளையும் படமாக்கி முடிக்க திட்டமிட்டுள்ளார்களாம்.
தமிழகத்தையே உலுக்கிய பொள்ளாச்சி சம்பவத்தை மையமாக வைத்து சூர்யா 40 எடுக்கப்படுவதாக தகவல் வெளியாகியிருக்கிறது. படத்தில் பெண்களுக்காக போராடுகிறாராம் சூர்யா. பொள்ளாச்சியில் நடந்த சில சம்பவங்களை படத்தில் சேர்த்திருக்கிறார் பாண்டிராஜ் என்று கூறப்படுகிறது.
சூர்யாவின் பிறந்தநாளான ஜூலை 23 ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சூர்யா 40 படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. அந்த படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக ப்ரியங்கா அருள்மோகன் நடிக்கிறார். சத்யராஜ், சரண்யா பொன்வண்ணன், ஜெயபிரகாஷ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள். படத்திற்கு டி. இமான் இசையமைக்கிறார்.