இலங்கையில் நடப்பது இலங்கை அரசின் ஆட்சியா வத்திக்கானின் ஆட்சியா என சிவசேனை அமைப்பின் தலைவர் மறவன்புலவு சச்சிதானந்தன் கேள்வி எழுப்பினார்.
யாழ் ஊடக அமையத்தில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்தார்
இலங்கை கத்தோலிக்க முதல்நிலை குருவானவர் கர்தினால் மல்கம் ரஞ்சித் அவர்கள் அண்மையிலே ஒரு கருத்தை சொல்லியிருக்கிறார் .இலங்கையில் ஒழுங்கான அரசாங்கம் நடைபெறவில்லை என்றும் இலங்கை அரசாங்கம் தோல்வி அடைந்துள்ளது என்றும் தெரிவித்தார். இது ஒரு கொடுமையான கூற்று.
கத்தோலிக்க மக்களுக்கு நடந்த உயிர்த்த ஞாயிறு குண்டு தாக்குதல் கொடுமை தான். அதற்காக அரசு செயல்படவில்லை என கேள்வி கேட்பது ஏற்றுக்கொள்ள முடியாது. அவருக்கு அந்த கேள்வியை கேட்பதற்கு அருகதை கிடையாது. இதுதான் முதல் தரம் வழிபாட்டிடம் உடைக்கப்பட்டதா? அல்ல நானூற்று இருபது ஆண்டுகளுக்கு முன்பு திருக்கோணேச்சரம்,
திருக்கேதீச்சரம் ஆலயங்களை உடைத்தபோது நாம் மனித உரிமை அமைப்புக்கு போனோமா?
மன்னார் ஆயர் என்ன செய்கின்றார். திருக்கேதீஸ்வர வளைவு உடைக்கப்பட்டமைக்கு இதுவரை மன்னிப்பு கேட்டாரா. அரசை குறை சொல்வதற்கு கர்தினால் மெல்கம் ரஞ்சித்க்கு என்ன தகுதியுள்ளது. போப்பாண்டவரின் ஆணையை நிறைவேற்றும் கர்தினாலுக்கு இலங்கை அரசை விமர்சிப்பதற்கு தகுதி இல்லை என்றார்.