நாமலை நேரில் சந்தித்து அரசியல் கைதி ஆனந்த சுதாகரை விடுதலை செய்ய கோரிய பிள்ளைகள்!

Date:

அரசியல் கைதியான ஆனந்த சுதாகரின் பிள்ளைகள் இன்று அமைச்சர் நாமல் ராஜபக்ஷவை சந்தித்தனர்.
வடமராட்சியின் முள்ளி பகுதியில் இடம்பெற்ற சேதனக் குப்பைகளை இயற்கை உரமாக மாற்றும் தொழிற்சாலை திறப்பு விழாவிற்கு வந்தபோதே நாமல் ராஜபக்ஷவை ஆனந்த சுதாகரின் குடும்பத்தினர் சந்தித்தனர்.
இந்த சந்திப்பின் போது தமது தந்தையை விடுதலை செய்யுமாறு, அரசியல் கைதி ஆனந்த சுதாகரின் மகன் கவிரதன், மகள் சங்கீதா ஆகியோர் அமைச்சரிடம் கோரிக்கை விடுத்தனர்.

அதேவேளை அரசியல் கைதிகளின் உறவுகளும் அண்மையில் விடுதலையான அரசியல் கைதிகளும் அமைச்சர் நாமலை சந்தித்து, ஏனைய அரசியல் கைதிகளின் விடுதலை குறித்து கோரிக்கை விடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.

spot_imgspot_img

More like this
Related

நிந்தவூரில் சட்டவிரோத குப்பை கொட்டலுக்கு கடும் நடவடிக்கை: இரகசிய கண்காணிப்பு கமராக்கள் பொருத்தம்

நிந்தவூர் எம்.எச்.எம். அஷ்ரப் சதுக்கம் மற்றும் நிந்தவூர் பிரதேச சபையைச் சுற்றியுள்ள...

வன்முறை முறைப்பாடுகளை கையாள வடக்கு பொலிஸாருக்கு தமிழில் விசேட பயிற்சி

சிறுவர் பெண்களுக்கு எதிரான வன்முறைகள், அடிப்படை உரிமைகள், பால்நிலை சமத்துவம் தொடர்பிலான...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்