தமிழக சிறப்பு முகாமில் கிழக்கிலங்கையை சேர்ந்தவர் உயிரிழப்பு!

Date:

திருச்சி சிறப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இலங்கை அகதியொருவர் உயிரிழந்துள்ளார். அம்பாரை, அக்கரைப்பற்று பகுதியை சேர்ந்த ஒருவர் உயிரிழந்துள்ளார். உண்ணாவிரதமிருக்கும் கைதிகளை உடன் விடுவிக்க வேண்டுமென தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் பெ. மணியரசன் வலியுறுத்தியுள்ளார்.

திருச்சி நடுவண் சிறையில் சிறப்பு முகாம் ஒன்றை உருவாக்கி அதில் ஈழத்தமிழர்கள் 78 பேரை அடைத்து வைத்துள்ளார்கள். இந்த 78 பேரும் உரிய கடவுச்சீட்டு இல்லாமல் இலங்கையிலிருநது தமிழ்நாட்டிற்கு வந்த குற்றத்திற்காகவோ அல்லது சிறு சிறு குற்றங்களுக்காகவோ நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்டு, தண்டனைக் காலத்தை முடித்தவர்கள்.

இவர்களில் பலர்க்குத் தமிழ்நாட்டில் குடும்பங்கள் இருக்கின்றன; உறவினர்கள் இருக்கின்றனர். அக்குடும்பங்களைச் சேர்ந்தோர் இந்திய அரசால் ஏதிலியராக ஏற்கப்பட்டவர்கள் என்று தெரிவித்துள்ள தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் பெ. மணியரசன்,

சிறப்பு முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ள ஈழத்தமிழர்களை அக்குடும்பங்களிடம் தமிழ்நாடு அரசு ஒப்படைக்க வேண்டும். வெளிநாடுகளுக்குப் போக வாய்ப்புள்ளோரையும் அவர்கள் பொறுப்பில் அனுப்பி வைக்கலாம் என்று அறிவுறுத்துகிறார்.

திருச்சி நடுவண் சிறை சிறப்பு முகாமில் உள்ள ஈழத்தமிழர்கள் கடந்த 17 நாட்களாக முகாமிலேயே ஒன்றாக அமர்ந்து முழக்கமெழுப்பிக் காத்திருப்புப் போராட்டம் நடத்தி வருகிறார்கள். இவர்களில் அக்கரைப்பற்றைச் சேர்ந்த முகமது அலி என்பவருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டு, திருச்சி மாவட்ட அரசு மருத்துவ மனையில் சேர்க்கப்பட்டு, சிகிச்சைப் பலனின்றி 24.06.2021 அன்று இறந்து விட்டார் என்ற செய்தி வெளியாகியுள்ளது.

மேலும் காத்திருப்புப் போராட்டம் நடத்தும் ஈழத்தமிழர்கள், தமிழ்நாடு அரசுத் தங்களை விடுதலை செய்ய வேண்டும், இல்லையெனில் கொன்றுவிட வேண்டும்; இந்த இரண்டில் ஒன்றைத் தமிழ்நாடு அரசு செய்யவில்லையென்றால் தற்கொலை செய்து கொள்கிறோம் என்று கூறிக் கொண்டு போராடுகிறார்கள். அதுபோன்ற பெருந்துயரங்கள் ஏற்படுவதற்கு முன் திருச்சி சிறப்பு முகாமில் உள்ள அனைத்து ஈழத்தமிழர்களையும் விடுதலை செய்துவிட வேண்டும் என முதலமைச்சருக்கு வலியுறுத்தி இருக்கிறார்.

spot_imgspot_img

More like this
Related

குவைத்தில் 2 இலங்கைப் பெண்களின் மரணம் குறித்து விசாரணை

குவைத்தின் அலி சபா அல்-சலீம் மற்றும் அல்-நஹ்தா ஆகிய இடங்களில் தனித்தனி...

12 வயது சிறுவனை கொன்ற முதலை

கல்கிரியகம காவல் பிரிவுக்கு உட்பட்ட மனேருவ பகுதியில் உள்ள வம்பதுவெவ என்னுமிடத்தில்,...

சோமதேவாவின் அறிக்கையை நிராகரிக்கிறோம்

செம்மணி மனித படுகொலை தொடர்பாக தொல்லியல் பேராசிரியர் ராஜ் சோமதேவாவின் அறிக்கையை...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்