உலகம்

இந்தியாவை போல் அமெரிக்காவுடன் நாகரிகமான உறவை பாகிஸ்தான் விரும்புகிறது – இம்ரான்கான்

துரதிருஷ்டவசமாக பயங்கரவாதத்துக்கு எதிரான போரின் போது உறவில் விரிசல் ஏற்பட்டதாகவும், அதனை மீட்டெடுக்க விரும்புவதாகவும் இம்ரான்கான் தெரிவித்தார்.

அமெரிக்காவுக்கும் இந்தியாவுக்கும் இடையில் தற்போது இருப்பதை போலவே பாகிஸ்தான் அமெரிக்காவுடன் ஒரு நாகரிகம் மற்றும் சமமான உறவை நாடுவதாக பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் கூறினார். அமெரிக்காவின் பிரபல நியூயார்க் டைம்ஸ் பத்திரிகைக்கு அளித்த பேட்டியின்போது இம்ரான்கான் இதனை குறிப்பிட்டார்.

மேலும் அவர் தான் பாகிஸ்தான் பிரதமராக பதவியேற்றவுடன் இந்திய பிரதமர் நரேந்திர மோடியை அணுகிய போதிலும், இந்தியாவுடனான உறவை சீராக்க தான் மேற்கொண்ட முயற்சி எந்த முன்னேற்றத்தையும் அடையவில்லை என‌ கூறினார்.

கடந்த காலத்தில் இந்தியா போன்ற, பிராந்தியத்தில் உள்ள மற்ற நாடுகளை விட பாகிஸ்தான் அமெரிக்காவுடன் நெருக்கமான உறவை கொண்டிருந்ததாகவும், பயங்கரவாதத்துக்கு எதிரான போரில் அமெரிக்காவின் கூட்டாளியாக இருந்ததாகவும் இம்ரான் கான் இந்த பேட்டியின் போது குறிப்பிட்டார்.

துரதிருஷ்டவசமாக பயங்கரவாதத்துக்கு எதிரான போரின் போது ஏற்பட்ட உறவில் விரிசல் ஏற்பட்டதாகவும், அதனை மீட்டெடுக்க விரும்புவதாகவும் இம்ரான்கான் தெரிவித்தார்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Related posts

கோலாலம்பூர் மெட்ரோ ரயில் விபத்தில் 200 பேர் காயம்!

divya divya

அமேசான் சிஇஓ ; புதிய தலைமை அதிகாரி நியமனம்!

divya divya

கொரோனாவால் வேலையிழந்து தெருவோரம் வசித்த ஆசிரியருக்கு முன்னாள் மாணவர்கள் இணைந்து செய்த உதவி!

Pagetamil

Leave a Comment

error: Alert: Content is protected !!