ஜிகர்தண்டா படம் மூலம் தன்னுடைய நடிப்பு திறனை வெளிப்படுத்திய நடிகர் பாபி சிம்ஹா நடிப்பில் தற்போது வசந்த முல்லை என்னும் திரைப்படம் உருவாகி உள்ளது.
எஸ்.ஆர்.டி எண்டர்டையின்மெண்ட் மற்றும் முத்ராஸ் பிலிம் பேக்டரி இணைந்து பிரம்மாண்டமான முறையில் தயாரித்து வரும் படம் வசந்த முல்லை. இந்தப் படத்தை குறும்பட இயக்குநர் ரமணன் புருஷோத்தமா இயக்கி வருகிறார். ஆக்ஷன் திரில்லர் பாணியில் உருவாகியுள்ள இப்படத்தில் பாபி சிம்ஹா கதாநாயகனாக நடிக்கிறார். இவருக்கு ஜோடியாக காஷ்மீரா பர்தேஷி நடித்துள்ளார்.
ஏற்கனவே இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி ரசிகர்களை கவர்ந்த நிலையில், தற்போது இப்படத்தின் டீசர் வெளியாகி இருக்கிறது. இந்த டீசரில் கடலுக்கடியில் இருக்கும் பாபி சிம்ஹாவை நாயகி காஷ்மீரா தன் மூச்சு காற்றை கொடுத்து காப்பாற்றுவது போல் காட்சிப்படுத்தி இருக்கிறார்கள். தற்போது இந்த டீசர் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.