வவுனியா ஈரப்பெரியகுளம் பகுதியில் பாவனைக்குதவாத 200 கிலோ கோழி இறைச்சி பொது சுகாதார பரிசோதகர்களால் கைப்பற்றப்பட்டுள்ளது.
வட பகுதியில் விற்பனைக்காக கொண்டுவரப்பட்ட குறித்த இறைச்சி ஏற்றிய வாகனத்தினை சோதனைக்குட்படுத்திய வவுனியா தெற்கு சுகாதார வைத்திய அதிகாரி பணிமனை பொது சுகாதார பரிசோதகர்கள் குறித்த வாகனத்தில் போதியளவு குளிரூட்டி இன்மையால் இறைச்சி பழுதடைந்த நிலையில் காணப்பட்டதையடுத்து அவற்றை கைப்பற்றியுள்ளனர்.
இதேவேளை வாகனத்தினையும் கைப்பற்றிய அவர்கள் நீதிமன்றத்தில் குறித்த பொருட்களை ஒப்படைக்கவும் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
இதேவேளை போகஸ்வெவ பகுதியில் சுகாதார விதி முறைகளை மீறி உணவுப்பொருட்களை விற்பனை செய்த வர்த்தகரொருவரிடம் பொருட்களை கைப்பற்றியுள்ள பொது சுகாதார பரிசோதகர்கள் வர்த்தகரை நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தவும் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
What’s your Reaction?
+1
1
+1
+1
+1
+1
+1
+1