பீகாரைச் சேர்ந்த பெண் ஒருவர் மந்திரவாதி ஒருவர் தன்னை கனவில் வந்து கற்பழித்து விட்டதாக பொலீஸில் புகார் அளித்த சுவாரஸ்யமான சம்பவம் சமீபத்தில் நடந்துள்ளது.
பீகார் மாநிலம் அவுரங்காபாத் பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர்
போலீஸ் ஸ்டேஷன் வந்து புகார் ஒன்றை கொடுத்துள்ளார். அந்த புகாரில் அவர் கூறியதாவது : “என் மகன் கடந்த ஜனவரி மாதம் உடல் நிலை சரியில்லாமல் இருந்தான் அப்பொழுது அவனிற்கு உடல் நிலை சரியாகுவதற்காக, அப்பகுதியில் உள்ள ஒரு மந்திரவாதியிடம் சென்றேன். அவர் ஒரு மந்திரத்தை சொல்லிக்கொடுத்தார். அங்கு சென்ற 15 நாளில் என் மகன் மரணமடைந்துவிட்டான். இதனால் நான் சோகமாகிவிட்டேன். பின்னர் ஒரு நாள் என் மகன் ஏன் இறந்தான் என்று கேட்க கூட அந்த மந்திரவாதியிடம் சென்றேன். தற்போது அந்த மந்திரவாதி என்னை கனவில் வந்து கற்பழிக்க முயற்சிக்கிறார். இறந்து போன என் மகன் தான் என்னை எப்பொழுதும் காப்பாற்றுகிறார். அந்த மந்திரவாதியிடமிருந்து என்னை காப்பாற்றுங்கள்” என கூறியிருந்தார்.
இந்த புகாரை பார்த்த பொலீசார் அதிர்ச்சியடைந்தவர் என்ன நடக்கிறது என்றே அவர்களுக்கு புரியவில்லை. இந்நிலையில் பொலீசார் அந்த மந்திரவாதியை அழைத்து விசாரித்தனர். அப்பொழுது இப்படியான சம்பவம் எதுவும் உண்மையில் நடக்கவில்லை என பொலீசாருக்கு புரிந்தது. இதையடுத்து அந்த பெண்ணைபொலீசார் மன நல மருத்துவரிடம் கூட்டி சென்ற போது அவர் மன நலம் பாதிக்கப்பட்டநிலையில் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவரை மனநல மருத்துவமனையில் சேர்ந்தனர். தன் மகனை இழந்த அந்த தாய் தற்போது மன நலம் பாதிக்கப்பட்டவராக மாறிவிட்டார் என்பதை பொலீசார் உணர்ந்தனர்.