பிரித்தானிய மகாராணியார் வெளிநாடுகளில் பணிபுரியும் இராணுவ வீரர்கள் குழு ஒன்றை கௌரவிக்கும் நிகழ்ச்சி ஒன்றில் காணொளி காட்சி மூலம் கலந்துகொண்டார்.
அப்போது அவர், Canadian Armed Forces Legal Branch என்னும் இராணுவ வீரர்கள் குழு ஒன்றிற்கு Royal Banner என்னும் கௌரவத்தை அளித்து சிறப்பித்தார். மகாராணியார் அந்த நிகழ்ச்சியின்போது, நாட்டை விட்டு, அரேபிய வளைகுடாவுக்கு சென்று பஹ்ரைனில் வேலை செய்யும் Major Angela Orme என்னும் வீராங்கனையுடன் பேசிக்கொண்டிருந்தார்.
Angela, ஏழு மாதங்களாக தனது பிள்ளைகள் இருவரையும் பிரிந்து வெளிநாட்டில் வேலை செய்வதை அறிந்துகொண்ட மகாராணியார், நீங்கள் உங்கள் பிள்ளைகளை அதிகம் மிஸ் பண்ணுவீர்கள் இல்லையா? என்று கேட்டார்.
ஆம், நான் அவர்களை மிக மிக அதிகம் மிஸ் பண்ணுகிறேன் என்று கூறிய Angela, ஒரு நாள் தங்கள் தாய் ஏன் தங்களைப் பிரிந்து அவ்வளவு தூரம் சென்றார் என்பதை என் பிள்ளைகள் புரிந்துகொள்ளுவார்கள், அன்று அவர்கள் தங்கள் தாயைக் குறித்து பெருமிதம் அடைவார்கள் என்றார்.
நான் இங்கே ஜாலியாக இருக்கிறேன் என்று நினைக்கிறார்கள் அவர்கள், ஏனென்றால், என்னால் என் மூன்று வயது மகனுக்கு நான் என்ன வேலை செய்கிறேன் என்பதை புரியவைக்கமுடியவில்லை.
நான் கடற்கொள்ளையர்களுடன் சண்டை போட்டுக்கொண்டிருக்கிறேன் என்று அவனுக்கு சொல்லியிருக்கிறேன், அது நல்ல விடயம் என்று அவனும் நம்புகிறான் என்றார்.
அதைக் கேட்டு நெகிழ்ந்துபோன மகாராணியார், புன்னகையுடன், அது ஒரு நல்ல பதில், ஏனென்றால், அது உண்மை என்று கூட சொல்லலாம் இல்லையா என்கிறார்.