உலகம்

கனடாவில் மேலும் ஒரு பள்ளியில் 751 குழந்தைகள் புதைப்பு!

கனடா நாட்டில் 130-க்கும் மேற்பட்ட பள்ளிகள் செயல்பட்டு வந்தன. அந்த பள்ளிகளில் புதைக்கப்பட்ட குழந்தைகளின் உடல்கள் தற்போது தோண்டி எடுக்கப்பட்டு வருகின்றன.

உயிரிழந்த குழந்தைகளுக்காக ஒருவருக்கொருவர் ஆறுதல் கூறிக்கொண்ட பெண்கள்
ஒட்டாவா:

500 ஆண்டுகளுக்கு முன்பு கண்டுபிடிக்கப்பட்ட வட அமெரிக்கா, தென் அமெரிக்க கண்டங்களில் ஐரோப்பிய மக்கள் குடியேறினார்கள்.அப்போது அந்த கண்டங்களில் பழங்குடி மக்கள் பல லட்சம் பேர் வசித்து வந்தனர். அவர்களில் பெரும்பாலானவர்களை கொன்று விட்டு அந்த பகுதிகளில் இவர்கள் குடியேறினார்கள்.

பிற்காலத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பவே பழங்குடியின மக்களை ஒழிக்கும் நடவடிக்கைகளில் மாற்றங்களை செய்தனர். அதாவது பழங்குடி மக்கள் குழந்தைகள் பிறந்ததுமே அந்த குழந்தைகளை பெற்றோரிடம் இருந்து பிரித்து சென்று விடுவார்கள்.

பின்னர் அந்த குழந்தைகளை பெற்றோரிடம் சேர விட மாட்டார்கள். அவர்கள் யார் என்றே பெற்றோருக்கு தெரியாது. குழந்தைகள் சொந்த மொழியில் பேச முடியாது. சொந்த கலாச்சாரத்தையும் பின்பற்ற முடியாது. அவர்களுக்காக வெள்ளைக்காரர்கள் உருவாக்கிய பள்ளிகளில் சேர்க்கப்படுவார்கள். அங்கேயே அவர்கள் தங்கியிருக்க வேண்டும்.

அந்த குழந்தைகளை சரியாக பராமரிப்பது இல்லை. எந்த வசதிகளையும் செய்து கொடுப்பது இல்லை. சரியாக உணவும் வழங்குவது இல்லை. இதன் காரணமாக ஏராளமான குழந்தைகள் உயிரிழந்தன. அந்த குழந்தைகளை பள்ளி வளாகத்திலேயே புதைத்தார்கள்.

இவ்வாறு கனடா நாட்டில் 130-க்கும் மேற்பட்ட பள்ளிகள் செயல்பட்டு வந்தன. அந்த பள்ளிகளில் புதைக்கப்பட்ட குழந்தைகளின் உடல்கள் தற்போது தோண்டி எடுக்கப்பட்டு வருகின்றன.

கனடாவில் பிரிட்டீஸ் கொலம்பியாவில் 215 குழந்தைகளின் உடல்கள் புதைக்கப்பட்டு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இது நாடு முழுவதும் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்த நிலையில் சாஸ்கட் செவான் என்ற இடத்தில் உள்ள ஒரு பள்ளியில் 751 குழந்தைகள் புதைக்கப்பட்டிருப்பது கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. அதுபற்றிய விசாரணை நடந்து வருகிறது.

இந்த பள்ளியை கிறிஸ்தவ அமைப்பு ஒன்று நடத்தி வந்தது. 1899-ம் ஆண்டு தொடக்கப்பட்ட இந்த பள்ளி 1997 வரை செயல்பட்டு வந்தது. சுமார் 6 ஆயிரம் குழந்தைகள் இவ்வாறு உயிரிழந்து இருப்பதாக பழங்குடியினர் அமைப்பு கூறி இருக்கிறது.

1863-ம் ஆண்டில் இருந்து சுமார் 1½ லட்சம் குழந்தைகளை வலுகட்டாயமாக அரசு பறித்து சென்றதாக கூறப்படுகிறது.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Related posts

துபாய் பாலைவனத்தில் பிறை நிலா வடிவ ஏரி!

Pagetamil

கொலம்பியாவில் அதிபர் சென்ற ஹெலிகாப்டர் மீது துப்பாக்கி சூடு!

divya divya

இன்று முரட்டு சிங்கிள்களிற்கான நாள்!

Pagetamil

Leave a Comment

error: Alert: Content is protected !!