10 மாதங்களில் 43 முறை கொரோனா தாக்கியும் உயிர் பிழைத்த பிரிட்டன் நபர்!

Date:

10 மாதங்களில் 43 முறை கொரோனா தாக்கியும் உயிர் பிழைத்த பிரிட்டன் நபர் சமூக வலைதளங்களில் வைரலாகி உள்ளார்.

பிரிட்டனில் தற்போது கொரோனா வைரஸின் இரண்டாவது அலை படிப்படியாகக் குறைந்து வருகிறது. இதனை அடுத்து வரும் ஜூலை மாதம் பிரிட்டனில் அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு முழுவதுமாக நீக்க போரிஸ் ஜான்சன் அரசு முடிவெடுத்துள்ளது. இந்நிலையில் பிரிட்டனில் உள்ள ஓர் 72 வயது மூத்த குடிமகன் தற்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறார்.

இதற்கு முக்கிய காரணம் இவரது உடலில் அதிக நாட்கள் கொரோனா வைரஸ் தங்கியிருந்ததுதான். டேவ் ஸ்மித் என்கிற வாகன பயிற்சியாளரான இவர் இதுகுறித்து கூறினார். கடந்த 10 மாதங்களில் 43 முறை இவரது உடலில் கொரோனா பாசிட்டிவ் அறிகுறி தென்பட்டதாகவும் ஏழு முறை இவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகவும் கூறியுள்ளார்.

தான் இறக்கப் போகிறோம் என்ற நினைப்பில் ஸ்மித் தனக்கு சவப்பெட்டியை தயார் செய்துவிட்டார். ஆனால் அதிர்ஷ்டவசமாக இவர் இறக்கவில்லை. பத்து மாதங்களாக இவரது உடலில் கொரோனா வைரஸ் மீண்டும் மீண்டும் தாக்கி வெளியேறியுள்ளது.

இதன்மூலமாக உலகிலேயே அதிகமுறை வைரஸால் பாதிக்கப்பட்டு அதிலிருந்து விடுபட்ட நபர் என்கிற பெயரை டேவ் ஸ்மித் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த செய்தி தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.

spot_imgspot_img

More like this
Related

“இந்தியாவின் உண்மையான முதலாளி அம்பானியா?” – எலான் மஸ்க் கேள்வி

இந்தியாவில் ஸ்டார்லிங்க் செயற்கைக்கோள் இணையச் சேவையைத் தொடங்குவதில் தொடரும் தாமதம் காரணமாக,...

தவெக வசமானது தாராபுரம் தொகுதி; மதுராந்தகத்திலும் வெற்றி முகம் | இடைத்தேர்தல் முடிவுகள்

தாராபுரம் இடைத்தேர்தலில் தவெக வெற்றி பெற்றது. மதுராந்தகம் மற்றும் தாராபுரம் சட்டமன்றத்...

தமிழ் வம்சாவளி சட்ட நிபுணர் நவநீதம்பிள்ளைக்கு அமைதிக்கான நோபல் பரிசு!

சர்வதேச சட்டம், மனித உரிமைகள் மற்றும் அமைதியை மேம்படுத்தும் பணிகளுக்காக, தமிழ்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்