வவுனியா, மூன்றுமுறிப்பு ஆடைத் தொழிற்சாலையில் கோவிட் தடுப்பூசி ஏற்றும் செய்தியை அறிக்கையிடச் சென்ற தமிழ் ஊடகவியலாளருக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
வவுனியா மாவட்டத்தின் மூன்றுமுறிப்பு மற்றும் இராசேந்திரங்குளம் பகுதிகளில் உள்ள ஆடைத் தொழிற்சாலைகளில் பணியாற்றுபவர்களுக்கு இராணுவத்தினர் ஊடாக நேற்று (24) கோவிட் தடுப்பூசிகள் ஏற்றப்பட்டன.
இதன்போது மூன்றுமுறிப்பு ஆடைத் தொழிற்சாலையில் கோவிட் தடுப்பூசி ஏற்றும் செயற்பாட்டை செய்தி அறிக்கையிட சென்ற தமிழ் ஊடகவியலாளருக்கு ஆடைத் தொழிற்சாலை நிர்வாகத்தால் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, காலையில் சென்ற சிங்கள ஊடகவியலாளர்கள் புகைப்பட்ம், வீடியோ எடுப்பதற்கும் செய்தி அறிக்கையிடவும் குறித்த ஆடைத் தொழிற்சாலை நிர்வாகம் அனுமதி வழங்கியிருந்தது. வவுனியா மாவட்டத்திலர் மூவின மக்களும், சிங்கள – தமிழ் மொழி ஊடகவியலாளர்களும் இணைந்து பணியாற்றுகின்ற போது குறித்த ஆடைத் தொழிற்சாலை நிர்வாகத்தின் குறித்த செயற்பாடு பிரிவினையை ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ளதாக அனுமதி மறுக்கப்பட்ட தமிழ் ஊடகவியலாளர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.





