செங்கலடி பொதுச்சந்தையில் சுகாதார விதிகளை மீறும் வர்த்தகர்களிற்கு எதிராக சட்ட நடவடிக்கை!

Date:

மட்டக்களப்பு – செங்கலடி பொதுச்சுகாதாரப்;பிரிவில் கொரோனா தொற்று அதிகரித்துவரும் நிலையில் செங்கலடி பொதுச்சந்தையில் தற்போது அதிகமாக மக்கள் ஒன்று கூடி பொருட்கொள்வனவில் ஈடுபடுவதை அவதானிக்கக்கூடியதாகவுள்ளது.

இதே வேளை சுகாதார நடைமுறைகளை மீறும் வகையிலும் தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறும் வகையிலும் செங்கலடி பொதுச்சந்தையில் அத்தியாவசியமற்ற வர்த்தக நிலையங்;கள் திறக்கப்பட்டு வர்த்தக நடவடிககையும் இடம்பெற்று வருகின்றது.
இதனால் பொதுச்சந்தையில் அதிகமாக பொது மக்கள் ஒன்று கூடுவதையும் சன நெரிசலையும் அதிகமாக அவதானிக்க முடிகின்றது.

இந் நிலையில் இன்று செங்கலடி பொதுச்சந்தைக்கு திடீர் சேதனையில் ஈடுபட்ட செங்கலடி பொதுசுகாதார பரிசேதகர் எஸ்.தவேந்திரராஜா உட்பட்ட ஏறாவூர் பொலிசார் தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறுவேறுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுத்தனர்.
இவ்வாறு சன நெரிசலான இடங்களில்; அத்தியாவசியமற்ற வர்த்த நிலையங்கள் திறப்பதை முற்றாகத் தவிர்க்க வேண்டும் எனவும் வர்த்தநடவடிக்கையில் ஈடுபடவேண்டாம் எனவும் சுகாதாரத்துறையினர் வர்த்தகர்களுக்கு கோரிக்கை விடுக்கின்றனர். மக்களும் இவ்விடயம் தொடர்பில் விழிப்புடன் செயற்பட்டால் மாத்திரமே நோய்த்தாக்கத்தை குறைத்துக்கொள்ள முடியும் எனவும் சுகாதாரத்துறையினர் மேலும் தெரிவிக்கின்றனர்.

spot_imgspot_img

More like this
Related

சீன தயாரிப்பு லேபிள்களை ஒட்டி மோசடி: தெஹிவளையில் அம்பலமான காலணி மோசடி!

தெஹிவளை, கவ்தானாவில் உள்ள ஒரு ரகசிய காலணி உற்பத்தி மற்றும் அசெம்பிளி...

கை,கால் நடுங்க தூக்கி வரப்பட்ட மஹிந்த: மரணிக்கும் முன் நாமலை ஜனாதிபதியாக்க வேண்டுமாம்!

அனுராதபுரத்தில் நடைபெற்ற ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ‘ஜன சதன’ (மக்கள் போராட்டம்)...

அராலிச்சந்தி வாள்வெட்டு: நால்வர் கைது!

ஊர்காவற்றுறை நீதிமன்றத்தில் சாட்சியமளித்துவிட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்த இளைஞர் மீது அராலிச்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்