வரிசையாக 5வது ரி20 தொடரை இழந்தது இலங்கை!

Date:

இங்கிலாந்திற்கு எதிரான 2வது ரி20 போட்டியிலும் இலங்கை தோல்வியடைந்துள்ளது.

முதலில் ஆடிய இலங்கை அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 117 ஓட்டங்களை பெற்றது. குசல் மெண்டிஸ் 39, குசல் பெரேரா 21, இசுறு உதான ஆட்டமிழக்காமல் 19 ஓட்டங்களை பெற்றனர்.

பந்துவீச்சில் மார்க் வூட், ரஷீத் 2 விக்கெட்டுக்கள் வீழ்த்தினர்.

இலக்கை விரட்டிய இங்கிலாந்து, டக்வேர்த் லூயில் முறைப்படி 16.1 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 108 ஓட்டங்களை பெற்று வெற்றியீட்டியது.

அந்த அணியின் லிவிங்ஸ்டன் ஆட்டமிழக்காமல் 29 ஓட்டங்களை பெற்றார்.

பந்துவீச்சில் ஹசரங்க 2 விக்கெட் வீழ்த்தினார்.

இந்த வெற்றியின் மூலம் 2-0 என இங்கிலாந்து தொடரை வென்றது.

இலங்கை அணி வரிசையாக 5வது ரி20 தொடரில் தோல்வியடைந்துள்ளது. 2009ஆம் ஆண்டு பாகிஸ்தானிற்கு எதிராக இலங்கை இறுதியாக ரி20 தொடர் ஒன்றை வென்றிருந்து. அதன்பின்னர், அவுஸ்திரேலியா, இந்தியா, மேற்கிந்தியத்தீவுகள் (2 முறை) தொடரை இழந்திருந்தது. இப்போது இங்கிலாந்திடமும் தொடரை இழந்தது.

spot_imgspot_img

More like this
Related

எம்.பி. பதவியிலிருந்து எம்.எஸ். அப்துல் வாஸித் இராஜினாமா! கட்சியினால் அமானிதமாக வழங்கப்பட்ட பதவியை மீண்டும் கட்சியிடம் ஒப்படைத்தார்

ஶ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியினால் அமானிதமாக வழங்கப்பட்ட தேசியப் பட்டியல்...

மஹிந்த கூட்டத்தை புகழ்ந்து பாடிய பைத்தியத்தை தெளிய வைப்போம்

யாழ்ப்பாணத்தில்; இருந்து சென்ற ஒரு பைத்தியம் முள்ளிவாய்க்கால் மட்டுமல்ல வடக்கு கிழக்கு...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்