இலங்கையில் நேற்று 1,941 COVID-19 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டனர். நாட்டில் இதுவரை அடையாளம் காணப்பட்ட தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை 248,050 ஆக அதிகரித்துள்ளது. <
கடந்த 46 நாட்களின் பின்னர் நாளொன்றில் பதிவான தொற்றாளர்களின் எண்ணிக்கை 2,000ஐ விடவும் குறைந்துள்ளது.
நேற்று அடையாளம் காணப்பட்டவர்களில் 1,917 பேர் புத்தாண்டு கிகொத்தணியுடன் இணைக்கப்பட்டுள்ளனர், வெளிநாடுகளில் இருந்து நாடு திரும்பிய 24 பேரும் தனிமைப்படுத்தல் மையங்களில் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டனர்.
கடந்த 24 மணி நேரத்தில் 1,639 நபர்கள் COVID-19 இலிருந்து குணமடைந்து வீடு திரும்பினர். குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 212,825 ஆக உயர்ந்துள்ளது.
தற்போது 32,456 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். வைரஸ் பாதித்ததாக சந்தேகிக்கப்படும் 1,331 நபர்கள் மருத்துவ கண்காணிப்பில் உள்ளனர்.




