யாழில் கலாச்சார சீரழிவா?; விடுதியில் திடீர் சோதனை: 2 யுவதிகள், 3 இளைஞர்கள், விடுதி உரிமையாளர் கைது!

Date:

யாழ்ப்பாணம் நல்லூர் கோயில் வீதியில் கலாசார சீரழிவு நடவடிக்கைகள் இடம்பெற்றதாகத் தெரிவிக்கப்பட்ட விடுதி ஒன்று முற்றுகையிடப்பட்டு இளம் பெண்கள் இருவர், இளைஞர்கள் மூவர் மற்றும் விடுதி உரிமையாளர் ஆகிய 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

யாழ்ப்பாணம் மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரி உப பொலிஸ் பரிசோதகர் மேனன் தலைமையிலான பொலிஸ் பிரிவினர் நீதிமன்றின் அனுமதி பெற்று இன்று முற்பகல் முன்னெடுத்த விடுதி முற்றுகையின் போதே இந்த கைது நடவடிக்கை இடம்பெற்றுள்ளது.

“நல்லூர் யாழ்ப்பாணம் – கோயில் வீதியில் உள்ள விடுதி ஒன்றில் கலாசார சீரழிவு நடவடிக்கைகள் இடம்பெறுவதாக முறைப்பாடுகள் கிடைத்தன. அதுதொடர்பில் விடுதியைச் சோதனையிடுவதற்கான அனுமதி யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் பெறப்பட்டது.

இன்று முற்பகல் விடுதியைச் சோதனையிட்ட போது மாறுபட்ட தகவல்களை வழங்கிய இளைஞர்கள் மூவரும் இரண்டு இளம் பெண்களும் அங்கு இருந்தனர்.

விடுதி உரிமையாளரும் மாறுபட்ட தகவல்களை வழங்கினார். அதனால் அவர்கள் 6 பேர் கைது செய்யப்பட்டனர்.

குருநகர் மற்றும் மானிப்பாயைச் சேர்ந்த 21, 24 வயதுடைய இளம் பெண்களே கைது செய்யப்பட்டனர். இளைஞர்களில் ஒருவர் உரும்பிராயைச் சேர்ந்தவர் ஏனைய இருவரும் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர்கள். அவர்கள் 30 வயதுக்குட்பட்டவர்கள் என்று தெரிவிக்கப்படுகின்றது.

சந்தேக நபர்கள் 6 பேரும் யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் முற்படுத்தப்படவுள்ளனர்” என்று பொலிஸார் தெரிவித்தனர்.

spot_imgspot_img

More like this
Related

சீன தயாரிப்பு லேபிள்களை ஒட்டி மோசடி: தெஹிவளையில் அம்பலமான காலணி மோசடி!

தெஹிவளை, கவ்தானாவில் உள்ள ஒரு ரகசிய காலணி உற்பத்தி மற்றும் அசெம்பிளி...

கை,கால் நடுங்க தூக்கி வரப்பட்ட மஹிந்த: மரணிக்கும் முன் நாமலை ஜனாதிபதியாக்க வேண்டுமாம்!

அனுராதபுரத்தில் நடைபெற்ற ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ‘ஜன சதன’ (மக்கள் போராட்டம்)...

அராலிச்சந்தி வாள்வெட்டு: நால்வர் கைது!

ஊர்காவற்றுறை நீதிமன்றத்தில் சாட்சியமளித்துவிட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்த இளைஞர் மீது அராலிச்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்