துமிந்த விடுதலைக்கு ஐ.நாவும் கண்டனம்!

Date:

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வாவின் விடுதலை தொடர்பில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபை விசனம் வெளியிட்டுள்ளது.

இது தொடர்பில் ஐ.நா. மனித உரிமை சபை தனது டுவிட்டர் பக்கத்தில்,

சக அரசியல்வாதியின் கொலைக்கு தண்டனை பெற்ற முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வாவுக்கான ஜனாதிபதி மன்னிப்பு விடுதலையானது, தேர்ந்தெடுக்கப்பட்ட, தன்னிச்சையாக மன்னிப்பு வழங்குவதற்கான மற்றொரு எடுத்துக்காட்டு ஆகும்.

இது சட்டத்தின் ஆட்சியை பலவீனப்படுத்துவதுடன், பொறுப்புக்கூறலையும் குறைமதிப்பிற்கு உட்படுத்துகிறது என்று பதிவிட்டுள்ளது.

பாரத லக்ஷ்மன் பிரேமச்சந்திரவின் கொலை குற்றச்சாட்டில் மரண தண்டனை அனுபவித்து வந்த துமிந்த சில்வா, ஜனாதிபதியின் பொது மன்னிப்பின் கீழ் நேற்று சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டார்.

இதற்கு பல்வேறு தரப்புக்களிலுமிருந்து கடுமையான எதிர்ப்புக்கள் வெளியாகி வருகிறது. சிறைகளிலுள்ள மரணதண்டனை கைதிகளும் தம்மை விடுதலை செய்ய கோரிக்கை விடுத்துள்ளனர்.

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பரத லக்ஷ்மன் பிரேமச்சந்திர 2011 இல் கொலை செய்யப்பட்ட வழக்கில் துமிந்த சில்வாவுடன் மேலும் இருவருக்கும் மரண தண்டனை விதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

 

spot_imgspot_img

More like this
Related

எம்.பி. பதவியிலிருந்து எம்.எஸ். அப்துல் வாஸித் இராஜினாமா! கட்சியினால் அமானிதமாக வழங்கப்பட்ட பதவியை மீண்டும் கட்சியிடம் ஒப்படைத்தார்

ஶ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியினால் அமானிதமாக வழங்கப்பட்ட தேசியப் பட்டியல்...

மஹிந்த கூட்டத்தை புகழ்ந்து பாடிய பைத்தியத்தை தெளிய வைப்போம்

யாழ்ப்பாணத்தில்; இருந்து சென்ற ஒரு பைத்தியம் முள்ளிவாய்க்கால் மட்டுமல்ல வடக்கு கிழக்கு...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்