சிங்கள தற்காப்பு கலைக்கு 202 ஆண்டுகளின் பின் தடை நீக்கப்படும்!

Date:

கடந்த 202 ஆண்டுகளாக இருந்த இலங்கைக்கே உரித்தான அங்கம்பொர தற்காப்புக் கலைகளுக்கு விதிக்கப்பட்டுள்ள தடை நீக்கப்படும் என்று விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

தடை நீக்கப்பட்ட பின்னர் அங்கம்பொர தற்பாதுகாப்பு கலையானது உள்நாட்டிலும், சர்வதேச அளவிலும் ஒரு தேசிய விளையாட்டாக பிரபலப்படுத்தப்படும் என்றும் அமைச்சர் கூறினார்.

மேலும், இந்நாட்டின் பாரம்பரிய அங்கம்பொர தற்காப்பு கலை, 1818 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் காலனித்துவக் காலத்தில் ஆங்கிலேயர்களால் தடைசெய்யப்பட்டது.

அத்துடன், அங்கம்பொர தற்காப்புக் கலைகளை கற்பிக்கும் திறமையானவர்களைக் கண்டுபிடித்து தேசிய அளவில் விளையாட்டைப் பயிற்றுவிப்பதற்கான பயிற்சி நிலையமொன்றை நிறுவ எதிர்பார்ப்பதாகவும் அமைச்சர் நாமல் ராஜபக்ஷ மேலும் தெரிவித்தார்.

spot_imgspot_img

More like this
Related

பிரித்தானிய பொலிசாரால் தேடப்படும் யாழ் இளைஞன்!

பிரித்தானியாவில் குற்றச்செயலில் ஈடுபட்ட யாழ்ப்பாணத்தை சேர்ந்த தமிழ் இளைஞன் ஒருவரை பொலிசார்...

கொடூர குற்றவாளி பஸ் லலித் நாளை இலங்கை அழைத்து வரப்படுகிறார்!

கடந்த ஆண்டு ஒக்டோபர் மாதம், டுபாய் காவல்துறையால் கைது செய்யப்பட்ட, சக்திவாய்ந்த...

யாழில் நகைத்திருடர்கள் பேர் கைது!

யாழ்ப்பாணத்தின் பல்வேறு பகுதிகளில் வீடுகளுக்குள் புகுந்து கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்