ஜெயலலிதாவை தொடர்ந்து இந்திரா காந்தி அவதாரம் எடுக்கும் நடிகை!

Date:

மறைந்த முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் வாழ்க்கையை அடிப்படையாக வைத்து உருவாகும் எமர்ஜென்சி திரைப்படத்தில் நடிப்பது குறித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார் கங்கனா ரனாவத்.

மறைந்த முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு ‘எமெர்ஜன்ஸி’ என்ற படம் தயாராகிறது. இதில் இந்திரா காந்தியாக நடிப்பதுடன், படத்தை தயாரிக்கவும் செய்கிறார் நடிகை கங்கணா ரணாவத் . இந்நிலையில் இந்த படத்தில் இந்திரா காந்தியாக நடிப்பதற்கு முழு உடல் பரிசோதனை செய்து கொண்டுள்ளதாக தெரிவித்துள்ளார்

இந்தியாவின் முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி வேடத்தில் நடிப்பதற்காக தன்னை தயார் செய்து கொண்டு வருகிறார் கங்கனா. இரண்டு மாதங்களுக்கு முன்பே இந்திரா காந்தி வேடத்தில் கங்கனா நடிக்க போகிறார் என்ற தகவலும், அது தொடர்பான சில போட்டோக்களும் வெளியாகி, வைரலாகின. இந்நிலையில் இந்த படத்தில் தான் இந்திரா காந்தியாக நடிக்க போவதை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் உறுதி செய்துள்ளார் கங்கனா. எமர்ஜென்ஸி காலகட்டத்தில் நடந்த சம்பவங்களை அடிப்படையாக வைத்து உருவாகவுள்ளது இந்த திரைப்படம்.

எமர்ஜென்சி திரைப்படத்தில் நடிப்பது குறித்து நடிகை கங்கனா தனது இன்ஸ்டாகிராம் பதிவில், ‘ஒவ்வொரு கதாபாத்திரமும் ஒரு புதிய பயணத்தின் அழகிய தொடக்கம். இன்று நாங்கள் ‘எமர்ஜென்ஸி’ படத்தில் இந்திரா காந்தி கதாபாத்திரத்துக்காக உடல், முகம் பரிசோதனையின் மூலம் ஒரு புதிய பயணத்தைத் தொடங்குகிறோம். இந்தக் கனவை நனவாக்க பல்வேறு அற்புதமான கலைஞர்கள் ஒன்றிணைய உள்ளனர். இது மிகவும் சிறப்புமிக்க ஒரு பயணமாக இருக்கப்போகிறது’ என குறிப்பிட்டுள்ளார்.

ஏற்கனவே நடிகை கங்கனா மறைந்த தமிழ்நாட்டு முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கதாபாத்திரத்தில் தலைவி திரைப்படத்தில் நடித்துள்ளார். ஏ.எல்.விஜய் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த திரைப்படத்தை ஆகஸ்ட் மாதத்தில் வெளியிட திட்டமிட்டுள்ளனர் படக்குழுவினர். இந்த திரைப்படத்திற்காக உடல் எடையை நம்ப முடியாத அளவிற்கு கூட்டி நடித்திருந்தார். இது மட்டுமல்லாமல் தற்போது இந்தியில் தாகத், தேஜாஸ் உள்ளிட்ட திரைப்படங்களிலும் நடித்து வருகிறார் கங்கனா ரனாவத்.

spot_imgspot_img

More like this
Related

ரஷ்யா, உக்ரைன், அமெரிக்கா முத்தரப்பு பேச்சு விரைவில்

உக்ரைன், அமெரிக்கா மற்றும் ரஷ்யா ஆகிய நாடுகள் பங்கேற்கும் முத்தரப்பு அமைதிப்...

நாடாளுமன்ற குடியிருப்பை பெற்றவர்களின் விபரம்

கோட்டையில் உள்ள மாதிவெல நாடாளுமன்ற உறுப்பினர் குடியிருப்பு வளாகத்தில், தற்போதைய நாடாளுமன்றத்தைச்...

சிஐடியினர் அநுராதபுரம் சென்றால் முழு திருடர்களையும் ஒரே மேடையில் பிடித்திருக்கலாம்!

அனுராதபுரத்தில் நடைபெற்ற பொதுஜன பெரமுன தலைமையிலான பேரணியையும் ராஜபக்ச குடும்பத்தையும் விமர்சித்த...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்