நடிகர் சிம்புவை வைத்து வேட்டை மன்னன் படத்தை எடுத்தார் நெல்சன். படத்தின் பணிகள் பாதி முடிந்து டீசர் வெளியான நிலையில் படம் டிராப்பானது. இதையடுத்து நயன்தாராவை வைத்து ‘கோலமாவு கோகிலா’ படத்தை இயக்கினார். அந்த படம் நல்ல வரவேற்பை பெற்றதையடுத்து தற்போது மூன்றாவது படமான ‘டாக்டர்’ படத்தை சிவகார்த்திகேயனை வைத்து இயக்கியுள்ளார். இந்த படம் ரிலீசுக்கு தயாராக உள்ளது.
இந்த படத்தையடுத்து விஜய்யின் 65வது படத்தை இயக்கி வருகிறார் நெல்சன் திலிப்குமார். ‘பீஸ்ட்’ என்ற வித்தியாசமான பெயரில் உருவாகி வரும் இப்படத்தின் ஃப்ர்ஸ்ட் லுக் போஸ்டர் விஜய்யின் பிறந்தநாளையொட்டி நேற்று முன்தினம் வெளியானது. இந்த போஸ்டருக்கு ரசிகர்களிடையே நல்ல வேற்பு இருந்தது. சமூக வலைத்தளத்திலும் அதிக லைக்குகளையும் பெற்றது.
இந்நிலையில் புதிய சர்ச்சை ஒன்று வெடித்துள்ளது. தற்போது விஜய்யின் ‘பீஸ்ட்’ மற்றும் சிம்பு – நெல்சன் கூட்டணியில் உருவாகி பாதியில் நின்ற ‘வேட்டை மன்னன்’ படத்திற்கும் தொடர்பு இருப்பதாக சிலர் சமூக வலைதளங்களில் கருத்துகளை தெரிவித்து வருகின்றனர். வேட்டை மன்னன் படத்திலும் சிம்பு துப்பாக்கியால் சுடுவது போல் இருந்தது. அதேபோன்றுதான் தற்போது வெளியாகியுள்ள விஜய் ‘பீஸ்ட்’ போஸ்டரும் உள்ளது. அதனால் வேட்டை மன்னன் கதையைதான் மீண்டும் விஜய்யை வைத்து நெல்சன் எடுக்கிறாரா என்ற தகவல் பரவி வருகிறது. எனினும் இது யூகம் என்றாலும் படத்தின் ரிலீசுக்கு பிறகே உண்மை தெரியும் என ரசிகர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.