அரசாங்கத்தின் மீது மக்களிற்கு அதிருப்தி அதிகரிக்கிறது; அரசியல் கைதிகளை விடுதலை செய்யும்படி நானே சொன்னேன்: கருணா!

Date:

மட்டக்களப்பில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன் வியாழேந்திரன் அவர்களின் வீட்டிற்கு முன்னால் நடந்த சூட்டுச் சம்பவம் உண்மையிலேயே ஏற்றுக்கொள்ளப்பட முடியாத விடயம். ஆயுத கலாசாரத்தை ஒழிக்க வேண்டும் அப்பாவி இளைஞர்களின் இழப்புகளை தவிர்க்க வேண்டும் என்பதற்காகத்தான் நான் உட்பட நிறைய பேர் இந்த ஆயுதம் ஏந்திய போராட்டம் வேண்டாம் என முடிவெடுத்து இருந்தோம் என தெரிவித்துள்ளார் தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் தலைவர் விநாயகமூர்த்தி முரளிதரன் (கருணா).

இன்று (24) செங்கலடியில் நடந்த செய்தியாளர் சந்திப்பில் இதனை தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்

இன்று பல அழிவுகளை நாம் காப்பாற்றி உள்ளோம். ஒரு இளைஞனின் உயிர் பறிக்கப்பட்டு விட்டது என்பது உண்மையிலேயே ஏற்றுக்கொள்ள முடியாத விடயம். இதை ஒரு பொறுப்பற்ற செயலாக நாம் பார்க்கின்றோம். இது முற்று முழுதாக ஒரு கொலை இது தொடர்பாக விசாரணைகளை திறம்பட செய்ய வேண்டும். ஜனாதிபதி அவர்களுக்கும் பிரதமர் அவர்களுக்கும் இது தொடர்பாக எழுத்து மூலமான கடிதத்தை நான் உங்கள் அனுப்பியுள்ளோம்.

இதற்கான நீதி உண்மையிலேயே கிடைக்க வேண்டும்.

மெய்ப் பாதுகாவலர்களாக நியமிப்பவர் களை ஒரு பொறுப்புவாய்ந்தவர்களாக நியமிக்க வேண்டும்.

தற்பொழுது பொறுப்பு வாய்ந்த பாராளுமன்ற உறுப்பினர் யார் வியாழேந்திரன் அவர்கள் முன்னுக்குப்பின் முரணான தகவல்களை வெளியிட்டு பாரிய கொலைச் சம்பவத்தை மறைப்பதற்கான முற்படுகிறார் இதை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

மூன்று மாதங்களாக சிசிடிவி கேமரா வேலை செய்யவில்லை என்பதும் இது ஒரு சிறு பிள்ளைத்தனமான செயற்பாடு. இந்த விடயத்தை அவர் பொறுப்பேற்க வேண்டும்.
பொது ஜன பெரமுன கட்சியில் போட்டியிட்ட வேட்பாளர். அது ஒரு பாரிய கட்சி. அதற்கென ஒரு கடமை கட்டுப்பாடு உள்ளது. ஆகவே அவர்கள் இதற்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். அல்லது அதற்கு முன் படுவார்கள் என்பதை நான் இந்த இடத்திலே கூறிக்கொள்ள விரும்புகிறேன். இந்த விடயம் கட்சியை களங்கப்படுத்த படுத்துகின்ற விடயம்.

நாங்கள் அந்தக் கட்சியின் ஒரு அங்கத்தவர் அல்ல. நாம் தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணி என்ற கட்சியை தற்பொழுது வளர்த்து வருகின்றோம். அதற்காகத்தான் வேண்டுகோளாக இளைஞர்கள் அணி திரளுங்கள் என் பின்னால் நாம் ஒரு எதிர்காலத்தை உருவாக்குவோம் என்றேன்.

நான் நினைக்கின்றேன் இந்த விடயம் ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்பட வேண்டிய விடயம்.

ரணில் அவர்களின் அணி பலவீனமானது என்பதால் சஜித் அணியில் பலர் சேர்ந்தனர். இதை அவர்கள்தான் தீர்மானிக்க வேண்டும் இது ஒரு பாரிய பிரச்சினையாக நான் பார்க்கவில்லை.

அரசாங்கத்திற்கு வைத்திய சங்கம் இந்த பயணத்தை தொடருங்கள் என கோரிக்கை முன்வைக்கின்றார்கள். காரணம் அவர்களுக்கு தான் தெரியும் இந்த ஒருநாள் நிலைமை தொடர்பாக. இதற்கு அரசாங்கம் ஒரு மாற்று நடவடிக்கையை உடனடியாக கையாளவேண்டும்.

தடுப்பூசி வீதம் என்பது உண்மையிலேயே போதாது. இந்தியாவிலேயே நான்கு வீதம் இலங்கையில் இரண்டு வீதம் தான் தடுப்பூசி போடப்பட்டுள்ளது. ஐரோப்பிய நாடுகளில் 100 வீதம், 80 வீதம், 90 வீதம் எனவே தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளது. ஆகவே இதில் அரசாங்கத்திற்கு ஒரு பொறுப்பு உள்ளது. இந்த தடுப்பூசி என்பது பக்குவமாக கையாளப்பட வேண்டும். தடுப்பூசி முழுமையாக ஏற்றும்போது  இந்த பயண தடைகளை தவிர்க்கலாம்.

இந்த பயணத்தடை என்பது மக்களுக்கு துன்ப துயரங்களை ஏற்படுத்துகின்றது. அதை நாம் மறுப்பதற்கில்லை. நோய்களிலும் இருந்து பாதுகாக்க வேண்டும். சுகாதார  பிரிவினருக்கு சங்கங்களுக்கு அமைப்புகளுக்கு நாம் ஒத்துழைப்பையும் வழங்க வேண்டும்.

நாங்கள் ஆரம்பத்திலிருந்து கூட தேர்தல் காலங்களிலும் கூட அழுத்தம் திருத்தமாக இதை கூறி வந்துள்ளோம். ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் இந்த அரசியல் கைதிகள் விடுவிக்கப்பட வேண்டும். அது தொடர்பாக வாக்குறுதி அளித்திருந்தார். ஜனாதிபதி தேர்தலிலும் மேடையிலும் பேசியிருந்தார்.

அண்மையில் கூட நாம் அவர்களை சந்தித்த போது இந்த விடயம் தொடர்பாக பேசியிருந்தேன். இந்த அரசியல் கைதிகளை விடுவிப்பதில் நீங்கள் கவனம் எடுங்கள் தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் உதாரணமாக மட்டக்களப்பில் இருக்கின்ற பாராளுமன்ற உறுப்பினர்கள் இந்த விடயம் தொடர்பாக குரல் கொடுப்பது என்பது குறைவு. அரசுடன் இருந்து கொண்டு அதிகமாக குரல் கொடுக்கலாம். இவர்கள் அதற்கு குரல் கொடுக்க பயந்துகொண்டு பாராளுமன்றத்தில் இருந்து கொண்டு பேசாமல் இருப்பது என்பது ஏற்றுக்கொள்ள முடியாது. இதை நான் அவரிடம் தெளிவாக கூறினேன். நீங்கள் இதை முன்னெடுத்து பாராளுமன்றத்தில் தெரிவித்து அவனை செய்யுங்கள் என்று. தற்பொழுது வந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

சட்ட சிக்கலும் உள்ளது. அரசியல் கைதிகளுக்கு பொதுமன்னிப்பு கொடுப்பது என்பது ஜெனிவா தீர்மானத்தில் உள்ள ஒரு விடயம். அதை பயன்படுத்தி இவர்களை விடுவிப்பது என்பது சாதாரண விடயம்.

ஆயிரக்கணக்கானோருக்கு புனர்வாழ்வளித்த இந்த அரசாங்கத்திற்கு- மஹிந்த ராஜபக்ஷ அவர்களுக்கு இது ஒரு சாதாரண விடயம். ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்கள் கைதிகளை விட வேண்டும் என்பதை நான் இதனுடாக அவரிடம் கேட்டுக் கொள்கிறேன்.

பசில் அமெரிக்க போய் வருவது சாதாரண விடயம். ஏற்கனவே உங்களுக்கு தெரியும் அவர் அமெரிக்க இரட்டை பிரஜா உரிமை உடையவர். அவர் வழமையாக செல்வதுண்டு வருவதுண்டு. அதை நீங்கள் கூறியதுபோல பத்திரிகைகளில் பார்த்தவுடன் தான் எனக்கு தெரியும். இதுதொடர்பாக நான் எந்த கருத்தையும் கூற விரும்பவில்லை. உண்மையிலேயே இது எனக்கு தெரியாத விடயம்.

அரசாங்கத்தைப் பொறுத்தவரையில் அதிருப்திகள் அதிகரித்து வருகின்றது. இதை அரசாங்கம் தவிர்த்துக் கொள்ள வேண்டும் என்பது என்னுடைய வேண்டுகோள்.

அரசாங்கம் மக்களின் மனங்களை வெல்வது என்ற விடயத்தில் பாதிக்கப்பட்டுள்ளது. தமிழ் மக்களை கருத்தாகக் ஒன்றும் சொல்லவில்லை நான் இலங்கை முழுக்க செல்பவன் சிங்கள மக்கள் மத்தியில் கூட இந்த கருத்துக்கள் இன்று அடர்த்தியான நிலையில் உள்ளது. பல விடயங்கள் பொருளாதார நெருக்கடி, விலை உயர்வுகள் மற்றும் தேர்தலில் அளிக்கப்பட்ட வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட வேண்டும். உதாரணமாக கூறப்போனால் கல்முனை முயற்சியும் ஒரு சாதாரணமான விடயம். தேர்தலில் பிரதம மந்திரி அவர்களால் நாமல் ராஜபக்ஷ அவர்களால் இது வெளிப்படையாக கூறப்பட்ட விடயம். நாம் ஆட்சிக்கு வந்தால் அடுத்த கணம் இந்தப் பிரதேச செயலகத்தை தரம் உயர்த்துவோம் என்றோம்.

ஆனால் இன்று கூட அந்த விடயத்தில் தடைகள் தடங்கல்கள் வந்து கொண்டிருக்கின்றது. நானும் இந்த விடயத்தில் தொடர்ந்து பல மட்டங்களில் எடுத்துக் கூறிக் கொண்டுதான் இருக்கின்றேன். ஆனால் இது போன்ற பல விடயங்கள் பின் தள்ளிப் போகும் ஆக இருந்தால் மக்களுக்கு உண்மையிலேயே அதிருப்தி ஏற்படும் என்றார்.

spot_imgspot_img

More like this
Related

சீன தயாரிப்பு லேபிள்களை ஒட்டி மோசடி: தெஹிவளையில் அம்பலமான காலணி மோசடி!

தெஹிவளை, கவ்தானாவில் உள்ள ஒரு ரகசிய காலணி உற்பத்தி மற்றும் அசெம்பிளி...

கை,கால் நடுங்க தூக்கி வரப்பட்ட மஹிந்த: மரணிக்கும் முன் நாமலை ஜனாதிபதியாக்க வேண்டுமாம்!

அனுராதபுரத்தில் நடைபெற்ற ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ‘ஜன சதன’ (மக்கள் போராட்டம்)...

அராலிச்சந்தி வாள்வெட்டு: நால்வர் கைது!

ஊர்காவற்றுறை நீதிமன்றத்தில் சாட்சியமளித்துவிட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்த இளைஞர் மீது அராலிச்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்