வாய்ப்பு இல்லை: சினிமாவுக்கு குட்பை சொல்லும் வாரிசு நடிகை!

Date:

80களில் வெற்றிகரமான நடிகையாக இருந்த ராதாவின் மூத்த மகள் கார்த்திகா அம்மா வழியில் நடிகையானார். சமந்தாவின் கணவர் நாக சைதன்யா நடித்த ஜோஷ் தெலுங்கு படம் மூலம் அவர் நடிக்க வந்தார். மறைந்த கே.வி. ஆனந்த் இயக்கிய கோ படம் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானார்.

முதல் படத்திலேயே தமிழ் ரசிகர்களை கவர்ந்தார். பாரதிராஜா இயக்கிய அன்னக்கொடி, புறம்போக்கு என்கிற பொதுவுடமை ஆகிய படங்களில் நடித்தார். அவர் அருண் விஜய்யுடன் சேர்ந்து நடித்த வா டீல் படம் பல ஆண்டுகளாக ரிலீஸாகாமல் இருக்கிறது.

கார்த்திகா தமிழ், தெலுங்கு தவிர்த்து மலையாளம், கன்னட மொழி படங்களிலும் நடித்தார்.

கடந்த 6 ஆண்டுகளாக அவர் நடிப்பில் எந்த படமும் வெளியாகவில்லை. இதற்கிடையே ஆரம்ப் என்கிற இந்தி தொலைக்காட்சி தொடரிலும் நடித்தார் கார்த்திகா.

நல்ல அழகும், நடிக்கும் திறனும் இருந்தும் அவரால் தன் அம்மாவை போன்று முன்னணி நடிகையாக முடியவில்லை. படித்த பெண்ணான கார்த்திகா தன் தந்தையின் யுடிஎஸ் குரூப் ஆஃப் ஹோட்டல்ஸின் டைரக்டராக இருக்கிறார்.

கார்த்திகாவுக்கு பட வாய்ப்புகள் சுத்தமாக வருவது இல்லையாம். இதையடுத்து சினிமாவுக்கு குட்பை சொல்லிவிட்டு தன் அப்பாவின் ஹோட்டல் தொழிலில் மட்டும் கவனம் செலுத்துவது என்று கார்த்திகா முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியிருக்கிறது.

கார்த்திகாவின் தங்கை துளசி, மணிரத்னத்தின் கடல் படம் மூலம் நடிகையானார். பின்னர் ஜீவாவின் யான் படத்தில் நடித்தார். கடந்த 7 ஆண்டுகளாக துளசி எந்த படத்திலும் நடிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

spot_imgspot_img

More like this
Related

சீன தயாரிப்பு லேபிள்களை ஒட்டி மோசடி: தெஹிவளையில் அம்பலமான காலணி மோசடி!

தெஹிவளை, கவ்தானாவில் உள்ள ஒரு ரகசிய காலணி உற்பத்தி மற்றும் அசெம்பிளி...

கை,கால் நடுங்க தூக்கி வரப்பட்ட மஹிந்த: மரணிக்கும் முன் நாமலை ஜனாதிபதியாக்க வேண்டுமாம்!

அனுராதபுரத்தில் நடைபெற்ற ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ‘ஜன சதன’ (மக்கள் போராட்டம்)...

அராலிச்சந்தி வாள்வெட்டு: நால்வர் கைது!

ஊர்காவற்றுறை நீதிமன்றத்தில் சாட்சியமளித்துவிட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்த இளைஞர் மீது அராலிச்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்