அரசியல் பழிவாங்கல் குறித்த ஜனாதிபதி ஆணைக்குழுவில் அறிக்கையின் தமிழ் மொழிபெயர்ப்பில் பல்வேறு குழறுபடிகள் உள்ளதை தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் சுட்டிக்காட்டினார்.
நாடாளுமன்றத்தில் இன்று (23) சிறப்புரிமை விவகாரத்தை எழுப்பி இதனை சுட்டிக்காட்டினார்.
அரசியல் பழிவாங்கல் குறித்த ஜனாதிபதி ஆணைக்குழுவில் அறிக்கையின் ஆங்கில மொழிபெயர்ப்பை நான் கோரினேன். அது சிங்கள மொழியில் மட்டுமே நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டிருந்தது. பின்னர் தமிழ் மொழி பெயர்ப்பு என சிடி ஒன்று வழங்கப்பட்டது. ஆனால், மொழிபெயர்ப்பில் நிறைய தவறுகள் இருந்தன. சிங்கள மொழியில் வெளியான அறிக்கையில் இருந்த விடயங்கள் பல தமிழ் மொழிபெயர்ப்பில் இருக்கவில்லை.
தமிழ் மொழி பேசும் நாடாளுமன்ற உறுப்பினர்களிற்கு ஏன் இந்த அநீதி? இது எனது மொழி உரிமையை பாதிக்கிறது. இதற்கு யார் பொறுப்பு?. அரசு வெளியிடும் அறிக்கைகள் சிங்களம், ஆங்கிலத்தில் மட்டுமே வெளியாகுவதாக அறிகிறேன்“ என்றார்.
இதற்கு பதிலளித்த சபாநாயகர், அப்படி நடந்திருந்தால் மன்னிப்பு கோருவதாகவும், இந்த விடயங்களை எப்படி தீர்ப்பதென கவனமெடுப்பதாகவும் தெரிவித்தார்.