இணைய வழி யோகா பயிற்சியில் கிளிநொச்சி மாணவர்கள் வெற்றி!

Date:

யாழ் இந்திய துணைத் தூதரகத்தின் ஏற்பாட்டில் இணையவழி மூலம் நடத்தப்பட்ட யோகா போட்டிப்பரீட்சையில் கிளிநொச்சி மாவட்டத்தில் முதல் மூன்று நிலைகளில் சித்தியடைந்த மாணவர்களுக்கான பரிசில் வழங்கும் நிகழ்வு நேற்று (22) கிளிநொச்சி வலயக்கல்வி பணிமனையில் நடைபெற்றது.

குறித்த நிகழ்வில் யாழ் இந்திய துணைத்தூதுவர் சங்கர் பாலச்சந்திரன், வடமாகாண கல்வி அமைச்சின் செயலாளர் இளங்கோவன், கிளிநொச்சி வலயக் கல்விப் பணிப்பாளர், வெற்றியீட்டிய பாடசாலையின் மாணவர்கள் அதிபர்கள், பெற்றோர்கள் என கலந்து கொண்டனர்.

குறித்த நிகழ்வில் அக்கராயன் மகா வித்தியாலயத்திற்கு இந்திய துணைத் தூதரகத்தின் ஏற்பாட்டில் இசைக்கருவிகளும் வழங்கப்பட்டன. குறித்த இசைக்கருவியை அக்கராயன் மகா வித்தியாலய அதிபர் பெற்றுக்கொண்டாமை குறிப்பிடத்தக்கது.

spot_imgspot_img

More like this
Related

5 கிராம் ஐஸ் வைத்திருந்தவருக்கு ஆயுள்!

5 கிராமுக்கும் அதிகமான 'ஐஸ்' போதைப் பொருளைத் தன்வசம் வைத்திருந்து, விற்பனை...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்