யாழில் 5,000 ஐ எட்டும் கொரோனா தொற்றாளர் எண்ணிக்கை!

Date:

யாழ் மாவட்டத்தில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 4,919 ஆக அதிகரித்துள்தாக யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் தெரிவித்துள்ளார்.

அத்தோடு குறிந்த தொற்றாளர்களில் சுமார் 3 ஆயிரத்து 696 நபர்கள் குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக கணபதிப்பிள்ளை மகேசன் மேலும் தெரிவித்துள்ளார்.

இன்றையதினம் யாழ் மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே கணபதிப்பிள்ளை மகேசன் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், யாழ் மாவட்டத்தில் இதுவரை 72 பேர் கொரோனா தொற்றினால் உயிரிழந்துள்ளனர்.

தற்போது உடுவில் மற்றும் சண்டிலிப்பாய் பிரதேச செயலாளர் பிரிவுகளில் இரண்டு கிராமங்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளது.

அத்தோடு மாவட்டத்தில் தற்போது 2 ஆயிரத்து 721 குடும்பங்களை சேர்ந்த 8 ஆயிரத்து 71 நபர்கள் சுய தனிமைப்படுத்தப்பட்டுள்ளர்.

மேலும் நாட்டில் வருமானம் குறைந்த குடும்பங்களுக்கு தற்போது வழங்கட்டுவரும் ஐந்தாயிரம் ரூபா கொடுப்பனவு யாழ் மாவட்டத்தில் இதுவரை 71 ஆயிரத்து 721 குடும்பங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார்.

spot_imgspot_img

More like this
Related

பயங்கரவாதத் தடுப்புச் சட்டமூலத்திற்கு எதிரான மனுக்கள்: உயர் நீதிமன்றத்தில் இன்று விசாரணை ஆரம்பம்…

அரசாங்கத்தினால் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள “அரசைப் பயங்கரவாதத்திலிருந்து பாதுகாக்கும் சட்டமூலம்” (Protection of...

ஊடகவியலாளர் நிமலராஜனின் 26ஆவது ஆண்டு நினைவேந்தல் யாழ்ப்பாணத்தில்!

படுகொலை செய்யப்பட்ட சிரேஷ்ட ஊடகவியலாளர் மயில்வாகனம் நிமலராஜனின் 26 ஆவது ஆண்டு...

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் 40ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு அம்பாறை மாவட்டத்தில் ஏற்பாடு

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் 40ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு, அம்பாறை மாவட்டத்தில்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்