மட்டக்களப்பு, பிள்ளையாரடியில் இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரனின் வீட்டின் முன்பாக சுட்டுக் கொல்லப்பட்டவரின் சடலம் உறவினர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளது.
நேற்று முன்தினம் (21) இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரனின் மெய்ப்பாதுகாவலருடனான தகராறை அடுத்து, நடந்த துப்பாக்கிச்சூட்டில் 34 வயதான மகாலிங்கம் பாலசுந்தரம் என்பவர் உயிரிழந்தார்.
அவரது சடலம் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டிருந்த நிலையில் பிரேத பரிசோதனை, பிசிஆர் சோதனை முடிந்ததை தொடர்ந்து இன்று மாலை உறவினர்களிடம் கையளிக்கப்பட்டது.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1