அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தைச்சேர்ந்தவர் ஜூலியா யோங்கோஸ்கி இவர் வார இறுதியை ஜாலியாக கிழிக்க தன் வீட்டின் அருகில் உள்ள ஒரு ஏடிஎம் சென்டருக்கு சென்று அங்கு 20 டாலர் பணத்தை எடுக்க திட்டமிட்டு அங்கு சென்றுள்ளார். அங்கு சென்றபோது அவர் தன் கணக்கில் எவ்வளவு பணம் பேலன்ஸ் இருக்கிறது என செக் செய்துள்ளார். செக் செய்தவருக்கு காத்திருந்தது அதிர்ச்சி அவரது வங்கி கணக்கில் 999,985,855.94 அமெரிக்க டாலர் அதாவது சுமார் 100 கோடி அமெரிக்க டாலர் பணம் இருப்பதாக காட்டியது. இதை கண்டது அவர் அதிர்ச்சியடைந்துவிட்டார். தன் வங்கி கணக்கில் அவ்வளவு பணம் வைத்திருக்கும் அளவிற்கு அவர் ஒன்றும் மிகப்பெரிய பணக்காரர் இல்லை. அவருக்கு அவ்வளவு பணம் கொடுக்கும் அளவிற்கு தெரிந்த ஆட்களும்இல்லை.
இது குறித்து அவர் கூறும் போது : “நான் 20 டாலர் பணம் எடுக்க தான் ஏடிஎம்மிற்கு சென்றேன். அங்கு என் பேலன்ஸை பார்த்ததும் என் கண்ணை என்னால் நம்ப முடியவில்லை. இவ்வளவு பணம் என் வங்கி கணக்கில் எப்படி வந்தது என தெரியவில்லை. சிலர் இதை கேள்விபட்டபோது எனக்கு லாட்டரி அடித்துள்ளது என கூறினார்கள். ஆனால் எனக்கு இது பயமாக இருக்கிறது. சிலர் தெரியாமல் வேறு கணக்கில் பணம் போட்டுவிட்டு மீண்டும் பணத்தை திரும்ப எடுக்கும் கதைகளை கேட்டிருக்கிறேன். இது குறித்து நான் கேட்ட பல முறை வங்கியை தொடர்புகொள்ள முயன்றேன். ஆனால் அது மாறிமாறி கம்யூட்டர் வாய்ஸ் தான் பேசுகிறது. மனிதர்கள் பேசினால் அவர்களிடம் என் பிரச்சனையை சொல்லி தீர்வு கேட்க முடியும். தற்போது என்ன செய்வதென்று தெரியவில்லை. வங்கியில் உள்ள பணம், மற்றவரின் பணம் என் பணம் அல்ல அதனால் அதை நான் தொடமாட்டோன்” என கூறினார்.
தங்கள் வங்கி கணக்கில் 100 கோடி அமெரிக்க டாலர் விழுந்ததை பார்த்தும் ஒரு பெண் அது தன் பணம் இல்லை அந்த பணம் தனக்கு வேண்டாம் என அவர் கூறியது பெரும் ஆச்சியத்தை ஏற்படுத்தியுள்ளது.