இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரனின் மெய்ப்பாதுகாவலரை 14 நாள் விளக்கமறியலில் வைக்க நீதிவான் உத்தரவிட்டுள்ளார்.
மட்டக்களப்பு, பிள்ளையாரடியிலுள்ள இராஜாங்க அமைச்சர் ச.வியாழேந்திரனின் வீட்டின் முன் நேற்று நடந்த துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்திருந்தார். வியாழேந்திரனின் மெய்ப்பாதுகாவலரே சூட்டை நடத்தியிருந்தார்.
இன்று, சம்பவம் தொடர்பான விசாரணைகளை மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்ற நீதிபதி நேரில் சென்று முன்னெடுத்துள்ளார்.
நேற்றைய சூட்டு சம்பவத்தை தொடர்ந்து அப்பகுதியில் பதற்ற நிலை ஏற்பட்டிருந்தது.
சம்பவத்தில் உயிரிழந்த நபரின் சடலம் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் இன்று காலை மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதிபதி குறித்த பகுதிக்குச் சென்று விசாரணைகளை முன்னெடுத்துள்ளார். இதன்போது, பொலிஸ் உத்தியோகத்தரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டார்.