இந்தியா முழுவதும் கொரோனா தடுப்பூசி போடும் பணி மிக துரிதமாக நடந்து வருகிறது. மக்கள் எல்லோரும் கொரோனா தடுப்பூசியை போட்டு வருகின்றனர். பல சமூகஆர்வலர்கள் கொரோனா தடுப்பூசி போடுவதை மக்களிடம் ஊக்கப்படுத்த சில சலுகைகள் மற்றும் இலவசங்களை கொரோனா தடுப்பூசி போட்டவர்களுக்காக வழங்கி வருகின்றனர். இதே போல மத்திய பிரதேச மாநிலம் இந்தூர் பகுதியில் ஒரு சம்பவம் நடந்துள்ளது அதை பற்றி பார்க்கலாம் வாருங்கள்.
அம்மாநிலத்தை சேர்ந்த பஸ் நிறுவன அதிபரான கோவிந்த் சர்மா அவர் வசிக்கும் பகுதியில் உள்ள கொரோனா தடுப்பூசி போடும் மையத்திலிருந்து தடுப்பூசி போட்டவர்களுக்கு இலவசமாக பஸ் டிக்கெட் வழங்குகிறார். இது மட்டுமில்லாமல் அதே பகுதியை சேர்ந்த கரண் சாப்ரா என்பவர் தடுப்பூசி போட்டவர்களுக்காக ஒரு குலுக்கல் போட்டி நடத்துகிறார். அதில் செல்பி ஸ்டிக் முதல் பிரிட்ஜ் வரை பல பொருட்களை இலவசமாக அறிவித்துள்ளார். குலுக்கல் முறையில் யாருக்கு என்ன பொருள் வருகிறதோ அவர்களுக்கு அந்த பொருள் இலவசமாக வழங்கப்படும் என தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறும் போது “கொரோனாவில் நாம் பலரை இழந்துவிட்டோம். அதிலிருந்து மீண்டு வருவதற்கு ஒரே வழி அனைவரும் தடுப்பூசி போட்டுக்கொள்வது மட்டுமே. அதனால் அதை துரிதப்படுத்த எங்களால் முடிந்ததை செய்கிறோம். இதனால் அதிக மக்கள் தடுப்பூசி எடுத்துக்கொண்டால் நாம் விரைவில் கொரோனாவை வெற்றி கொள்ளலாம். ” எனக் கூறினார்.