மது அருந்துவதை நிறுத்தி ஓராண்டாகி விட்டது: சிம்பு

Date:

மது அருந்துவதை நிறுத்தி ஓராண்டு ஆகிவிட்டதாக ட்விட்டர் ஸ்பேஸில் சிம்பு தெரிவித்துள்ளார். அவர் கூறியதை கேட்ட ரசிகர்கள் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை.

வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடித்திருக்கும் மாநாடு படத்தில் வரும் மெஹர்சைலா பாடலின் லிரிக்கல் வீடியோ இன்று வெளியானது. இதையடுத்து சிம்பு, கல்யாணி ப்ரியதர்ஷன், எஸ்.ஜே. சூர்யா, வெங்கட் பிரபு, தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி, இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா, மதன் கார்கி, பிரேம்ஜி, பவதாரணி ஆகியோர் ட்விட்டர் ஸ்பேஸில் வந்தார்கள்.

அப்பொழுது சிம்பு கூறியதாவது,

நான் மது அருந்துவதை நிறுத்தி ஓராண்டு ஆகிவிட்டது. கல்யாணி ப்ரியதர்ஷன் நன்றாக நடித்திருக்கிறார். இன்டிபென்டன்ட் பாடல் பாட வேண்டும் என்று ஆசையாக இருக்கிறது. நானும், யுவனும் சேர்ந்து பாடல் வெளியிட வேண்டும்.

இன்று நான் இங்கு இருப்பதற்கு ரசிகர்கள் தான் காரணம். என்னிடம் யார் பேசினாலும் என் ரசிகர்கள் என் மீது வைத்திருக்கும் அன்பை பற்றி தான் பேசுவார்கள். அனைவருக்கும் இது போன்று அமையாது, கிடைக்காது. நான் ஆசிர்வதிக்கப்பட்டவன். இனிமே நீங்கள் மகிழ்ச்சியாக இருப்பீர்கள், எல்லாமே நல்லதா நடக்கும்.

விஜய்ணாவுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள். ட்விட்டர் ஸ்பேஸில் வந்த அனைவருக்கும் நன்றி என்றார்.

மெஹர்சைலா வீடியோவை பார்த்த ரசிகர்களோ, சிம்பு தன் எடையை குறைப்பதற்கு முன்பு எடுத்த வீடியோவாக இருக்கிறது. தயவு செய்து அதை மீண்டும் ஷூட் செய்யுங்கள் என்று வெங்கட் பிரபுவிடம் கோரிக்கை விடுத்தனர்.

அதற்கு வெங்கட் பிரபு ட்விட்டர் ஸ்பேஸில் கூறியதாவது, மெஹர்சைலா பாடலில் பழைய விஷுவல் இருந்தது. ஆனால் படத்தில் புது எஸ்டிஆரை பார்ப்பீர்கள். இப்போ இருக்கும் எஸ்டிஆரை தான் பார்ப்பீர்கள் என்றார்.

spot_imgspot_img

More like this
Related

னோஜனின் குடும்பத்திற்கு ரிஷாட் பதியுதீன் நேரில் ஆறுதல்: விடுதலைக்காகத் தீவிர முயற்சி

சவூதி அரேபியாவில் தண்டனை விதிக்கப்பட்டுத் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள கல்முனை, நற்பிட்டிமுனையைச்...

சஹ்ரானைக் கண்டதுமில்லை-பேசியதுமில்லை-ரிசாட் பதியுதீன்

ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதலின் முக்கிய சூத்திரதாரியான சஹ்ரான் ஹாசிமுடன் தனக்கு...

யாழில். இரண்டு கடலமைகளுடன் ஒருவர் கைது

யாழ்ப்பாணம் , சேந்தான்குளம் பகுதியில் இன்றைய தினம் சனிக்கிழமை இரண்டு கடலமைகளுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார் சேத்தான்குளம் பகுதியில்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்