மன்னார் இலுப்பைக்கடவை கிராம அலுவலகர் கொலை சந்தேக நபருக்கு பிணை!

Date:

மன்னார் மாந்தை மேற்கு பிரதேச செயலகத்தின் கிராம அலுவலகர்களுக்கான பதில் நிர்வாக உத்தியோகத்தராகவும் இலுப்பைக்கடவை கிராம உத்தியோகஸ்தராகவும் கடமையாற்றிய எஸ்.விஜியேந்திரன் என்பவரின் கொலை தொடர்பாக கைது செய்யப்பட்ட சந்தேக நபர் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை (22) மன்னார் மேல் நீதி மன்றத்தினால் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளதாக சட்டத்தரணி எஸ்.டினேஸன் தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

மன்னார் மாந்தை மேற்கு பிரதேச செயலக பிரிவின் கடந்த வருடம் டிசம்பர் மாதம் கடுமையாக தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட கிராம அலுவலகரின் கொலை தொடர்பாக சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்யப்பட்ட நபர் இன்று செவ்வாய்கிழமை (22) மன்னார் மேல் நீதி மன்றத்தினால் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இலுப்பைக் கடவை கிராம அலுவலகரின் கொலையுடன் தொடர்பு பட்டதாக சந்தேகிக்கப்படும் குறித்த நபர் கைது செய்யப்பட்டு தொடர்ச்சியாக விளக்கமறியல் வைக்கப்பட்டிருந்த நிலையில் இன்று செவ்வாய்க்கிழமை (22) குறித்த வழக்கு மன்னார் மேல் நீதிமன்றத்தில் விசாரணக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

இதன் போது குறித்த சந்தேக நபர் குறித்து மன்னார் மேல் நீதிமன்றத்தில் சட்டத்தரணி ஊடாக பிணை விண்ணப்பம் தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

குறித்த பிணை விண்ணப்பத்தின் கட்டளை இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை (22) வழங்கப்பட்டதாக சட்டத்தரணி எஸ்.டினேஸன் தெரிவித்தார்.

குறித்த கட்டளையின் அடிப்படையில் குறித்த சந்தேக நபர் கடந்த 6 மாதங்களுக்கு மேலாக விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த நிலையில் அதனை விதி விலக்கான காரணமாகக் கொண்டும், நாட்டில் அதி வேகமாக பரவி வருகின்ற கொரோனா தொற்றை மன்று தனது மேலான கருத்தில் கொண்டும் குறித்த சந்தேக நபரினை 25 ஆயிரம் ரூபாய் பெறுமதியான ரொக்கப் பிணையிலும், இரண்டு சரீர பிணையிலும் செல்லவும், இருவரில் ஒருவர் மனு தாரராகவும் இருக்க வேண்டும் என்ற அடிப்படையிலும், மாதத்தில் இரு ஞாயிற்றுக்கிழமைகளில் இலுப்பைப்கடவை பொலிஸ் நிலையத்தில் காலை 9 மணி முதல் 12 மணி வரையுமான நேரத்தில் கையொப்பமிட வேண்டும் என்ற நிபந்தனையின் அடிப்படையிலும் குறித்த சந்தேக நபர் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளார்.

குறித்த வழக்கு விசாரணையுடன் தொடர்புடைய குற்றப்புலனாய்வு துறை அதிகாரிகள் குறித்த சந்தேக நபர் தொடர்பாக எவ்வித ஆதாரங்களையும் மன்றில் முன் வைக்கவில்லை.

இதனால் ஆதாரங்கள் எவையும் நிரூபிக்க முடியாத நிலையில் சட்டத்தரணிகளினால் மன்றில் சுட்டிக் காட்டப்பட்ட நிலையில், சந்தேக நபர் நிபந்தனையின் அடிப்படையில் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டார் என சட்டத்தரணி எஸ்.டினேஸன் மேலும் தெரிவித்தார்.

spot_imgspot_img

More like this
Related

ஷானி அபேசேகர, ரவி செனவிரத்னவுக்கு எதிரான கோட்டா கால நடவடிக்கை அரசியல் ரீதியானது: உச்ச நீதிமன்றம் தீர்ப்பு!

2024 ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னதாக, முன்னாள் சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகளான ரவி...

பிள்ளையான் உட்பட 3 பேருக்கு செப்டம்பர் 29 வரை விளக்கமறியல்

மட்டக்களப்பில் கடந்த 2008 ம் ஆண்டு ரி 56 ரக துப்பாக்கியால்...

தியாக தீபம் திலீபனின் 39ஆவது ஆண்டு நினைவேந்தல் யாழ்ப்பாணத்தில் ஆரம்பம்

இந்திய அரசிடம் ஐந்து அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து நீராகாரமின்றி உண்ணாவிரதம் இருந்து...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்