வடமாகாண மின்சார சபையின் பொறுப்பற்ற செயல் மிகநீண்டகாலமாக விதிக்கபட்டிருந்த பயணத்தடை நேற்றைய தினம் நீக்கப்பட்ட நிலையில் பொதுமக்கள் பலரும் தம்மிடம் காணப்பட்ட மாதாந்த மின்பட்டியல் கொடுப்பனவு, மின்துண்டிப்பு படிவங்களை கொண்டு யாழ் பிரதேச செயலகத்திற்கு அண்மையில் உள்ள வடமாகாண மின்சார சபை கொடுப்பனவு அலுவலகத்திற்கு சென்ற பொழுது அங்கு பட்டியல் கொடுப்பனவுகளை செலுத்த முடியாது, அஞ்சல் அலுவலகங்கள் மற்றும் வங்கிகளில் செலுத்துமாறும் கடமையிலிருந்த பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் தெரிவித்தனர்.
இதனால் நீண்ட தூரத்திலிருந்து வந்த மின்சாரசபை வாடிக்கையாளர் விசனத்துடன் சென்றனர்.
பின்னர் மின்சார கொடுப்பனவு பீடத்திற்கு பொறுப்பான பொறியியலாளரை ஊடகங்கள் தொடர்பு கொண்டு கேட்ட போது பணமூலம க செலுத்தலாம் என கூறினார்.
மீண்டும் அவ்விடத்திற்கு ஊடகவியலாளர்கள் சென்றபொழுது பொதுமக்கள் திருப்பியனுப்பப்பட்ட வேளையில் ஊடாகவியலாளர் பொதுமக்களிடம் நடந்தவற்றை செய்தியாக சேகரிக்க முற்பட்ட வேளை மின்சார பட்டியல் கொடுப்பனவை பணமூலமாக செலுத்தலாம் என கதவுகள் பாதுகாப்பு உத்தியோகத்தரால் திறக்கப்பட்டது.
அதன் பின் பெருமளவான வாடிக்கையாளர் தமது கொடுப்பனவை சமூக இடைவெளியுடன் செலுத்தினர்.





