ஆண்களும் மனிதர்கள் தானே; பெண்கள் ஆடைகளை குறைத்தால் மனம் சஞ்சலப்படத்தான் செய்யும்: பாகிஸ்தான் பிரதமர்!

Date:

பெண்களின் ஆடைக் குறைப்பே பாலியல் வன்முறைகளுக்குக் காரணம் என்று பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் தெரிவித்துள்ளார். இது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், சமீபத்தில் எச்பிஓ தொலைக்காட்சியில் பங்கெடுத்த நேர்காணல் ஒன்றில், பாலியல் வன்முறைகள் அதிகரிப்பதற்கு பெண்களின் ஆடைகளே காரணம் என்று கூறியிருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

எச்பிஓ தொலைக்காட்சி நேர்காணலில் பாலியல் வன்முறை அதிகரிப்பு குறித்த கேள்விக்கு இம்ரான் கான் கூறும்போது, “பெண்கள் குறைவாக ஆடை அணிந்தால், அது ஆண்களை பாதிக்கும். அவர்கள் இயந்திரம் அல்ல. இது ஒரு பொதுவான அறிவு” என்று தெரிவித்துள்ளார்.

இம்ரான் கானின் இக்கருத்துக்கு பாகிஸ்தானின் சமூக வலைதளங்களில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இம்ரான் கான் ஆணாதிக்கச் சிந்தனை கொண்டவர் என்று பலரும் விமர்சித்து வருகின்றனர்.

spot_imgspot_img

More like this
Related

அமெரிக்காவில் சிறிய விமானம் விபத்து – குழந்தை உட்பட 6 பேர் உயிரிழப்பு!

அமெரிக்காவின் விஸ்கான்சின் மாநிலத்தில் இடம்பெற்ற சிறிய விமான விபத்தில் குழந்தை உட்பட...

இலங்கையில் இன்னும் அறிமுகமாகாத டெங்கு தடுப்பூசி! அனுமதி வழங்குவதில் தாமதம் ஏன்?

இலங்கையில் டெங்கு தடுப்பூசியை அறிமுகப்படுத்துவதாக சுகாதார அமைச்சு அறிவித்திருந்த போதிலும், இதுவரை...

பௌத்த பிக்குகளின் ஆடை விவகாரத்தில் பணிந்தது அனுர அரசு!

சிறையில் உள்ள பௌத்த பிக்குகள் நீதிமன்றத்தில் ஆஜராவதற்கோ அல்லது பிற நோக்கங்களுக்காகவோ...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்