ரஷ்யாவில் மேலும் 17611 பேருக்கு கொரோனா பாதிப்பு!

Date:

உலக அளவில் கொரோனா-வைரஸ் தொற்று பாதிப்பில் முதலிடத்தில் அமெரிக்காவும், இரண்டாம் இடத்தில் இந்தியாவும், மூன்றாவது இடத்தில் பிரேசிலும் உள்ளன.கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளின் வரிசையில் தற்போது ரஷ்யா 6-வது இடத்தில் உள்ளது.

இந்நிலையில், ரஷ்யாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 17611 பேருக்கு கொரோனா-வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் ரஷ்யாவில் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை தற்போது 53 லட்சத்தைத் தாண்டியுள்ளது.

கொரோனா-வைரஸ் தொற்றுக்கு மேலும் 450 பேர் உயிரிழந்ததால், அங்கு பலியானோர் எண்ணிக்கை 1 லட்சத்து 29 ஆயிரத்து 361 ஆக உயர்ந்துள்ளது.

அங்கு கொரோனா தொற்றில் இருந்து 48.69 லட்சத்துக்கும் அதிகமானோர் சிகிச்சை பெற்று குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். தற்போது 3.17 லட்சத்துக்கும் மேற்பட்டோர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருவதாக அந்நாட்டு சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

spot_imgspot_img

More like this
Related

முன்னாள் பிரதியமைச்சரின் மனைவி விளக்கமறியலில்

முன்னாள் பிரதி அமைச்சர் சரண குணவர்தனவின் மனைவியான லக்மந்தி ஹெட்டியாராச்சி, நீதிமன்ற...

22வது திருத்தச்சட்டம் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது!

22 வது திருத்தச் சட்டமூலத்தின் மூன்றாம் வாசிப்பு திருத்தங்களுடன் விசேட பெரும்பான்மையுடன்...

அமெரிக்க- சீன தலைவர்கள் சந்திப்பு

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் வெள்ளை மாளிகையில் சீன ஜனாதிபதி ஜி...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்