26.4 C
Jaffna
March 29, 2024
இந்தியா

‘நோய்நாடி நோய்முதல் நாடி’: சர்வதேச யோகா தினத்தையொட்டி பிரதமர் மோடி உரை..

கொரோனா பெருந்தொற்று காலத்தில் யோகா நம்பிக்கை ஒளியாக திகழ்கிறது என சர்வதேச யோகா தினத்தில் பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றியுள்ளார்.

உடலுக்கும், உள்ளத்துக்கும் ஆரோக்கியம் சேர்க்கும் அரிய கலை யோகா. ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பு இந்தியாவில் தோன்றிய இந்த கலை, இப்போது உலகமெங்கும் பரவி இருக்கிறது. உடல், உள்ளம், உணர்ச்சிகள், ஆன்மா ஆகியவற்றை ஒருங்கிணைக்கும் இந்த கலையை உலகமெங்கும் பரப்பும் நோக்கத்தில் பிரதமர் மோடி ஐ.நா. பொதுச்சபையில் 2014ம் ஆண்டு செப்டம்பர் 27ம் திகதி பேசினார்.

அதைத் தொடர்ந்து உலக நாடுகளின் ஒருமித்த ஆதரவுடன் ஆண்டுதோறும் ஜூன் 21ம் தேதி சர்வதேச யோகா தினத்தை கொண்டாட முடிவு எடுக்கப்பட்டது. முதல் சர்வதேச யோகா தினம், 2015ம் ஆண்டு ஜூன் 21ம் திகதி கொண்டாடப்பட்டது.

இன்று 7வது சர்வதேச யோகா தினம் உலகமெங்கும் கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் பொது இடங்களில் பிரபலங்கள் உள்ளிட்ட பல தரப்பினரும் யோகா பயிற்சியில் ஈடுபடுவது வழக்கமாகி உள்ளது. இப்போது கொரோனாவின் 2வது அலையை முடிவுக்கு கொண்டு வரும் பெரும் போராட்டத்தில் நாடு ஈடுபட்டுள்ளதால், கொரோனா கட்டுப்பாட்டு விதிமுறைகள் அமலில் இருப்பதால், 7வது சர்வதேச யோகா தினம் எளிமையாக கொண்டாடப்படுகிறது.

இதையொட்டிய சிறப்பு நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பங்கேற்று பேசினார். அப்போது அவர் பேசியதாவது, ஒவ்வொரு நாடும், ஒவ்வொரு நாட்டு மக்களும் ஆரோக்கியமாக இருக்க பிரார்த்திக்கின்றேன். கொரோனா பெருந்தொற்று காலத்தில் நம்பிக்கை ஒளியாக திகழ்கிறது யோகா. யோகா செய்ய வேண்டும் என்ற உத்வேகம் மட்டும் இன்னும் குறையவில்லை.

இந்தியா உள்பட உலகம் முழுவதும் சர்வதேச யோகா தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. டெல்லி உள்ளிட்ட இடங்களில் மத்திய மந்திரிகள் தங்களது வீடுகளில் யோகாசனங்களை செய்கின்றனர். நோய் நாடி நோய் முதல் நாடி அதுதணிக்கும் வாய்நாடி வாய்ப்பச் செயல் என்ற திருக்குறளை சுட்டிக்காட்டி சர்வதேச யோகா தினத்தில் பிரதமர் மோடி பேசினார்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

“எம்பி சீட்டுக்காக கணேசமூர்த்தி தற்கொலை என்பதில் துளியும் உண்மையில்லை” – வைகோ

Pagetamil

ஐபிஎல் கிரிக்கெட் சூதாட்டத்தில் ரூ.1.5 கோடியை இழந்த கணவர்: கடன் கொடுத்தவர்கள் நெருக்கடியால் மனைவி தற்கொலை

Pagetamil

மதிமுகவுக்கு பம்பரம் சின்னம் ஒதுக்க தேர்தல் ஆணையம் மறுப்பு

Pagetamil

முருகன், ஜெயக்குமார், ராபர்ட் பயஸ் ஒரு வாரத்தில் இலங்கை அனுப்பப்படுவர்: தமிழக அரசு

Pagetamil

சிறையிலிருந்தபடி ஆட்சி புரியும் கேஜ்ரிவால்

Pagetamil

Leave a Comment