இராஜாங்க அமைச்சர் ச.வியாழேந்திரனின் வீட்டின் முன் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தவரின் சடலம் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
மகாலிங்கம் பாலசுந்தரம் (34) என்ற டிப்பர் வாகன சாரதியொருவரே சுட்டுக் கொல்லப்பட்டார்.
அவரது தலையில் துப்பாக்கி ரவை பாய்ந்துள்ளது.
துப்பாக்கிச்சூட்டை நடத்திய, இராஜாங்க அமைச்சரின் பாதுகாவலரான பொலிஸ் உத்தியோகத்தர் கைது செய்யப்பட்டுள்ளார்.





