நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா தொற்று காரணமாக சுமார் ஒரு மாதம் நாட்டில் பயணத்தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில், இன்று திங்கட்கிழமை (21) காலை குறித்த பயணத்தடை தளர்த்தப்பட்டது.
இந்த நிலையில் நாட்டில் உள்ள மது விற்பனை நிலையங்கள் இன்று திங்கட்கிழமை(21) காலை முதல் சுகாதார நடை முறைகளுக்கு அமைவாக திறக்க அனுமதி வழங்கப்பட்டது.
அதற்கு அமைவாக மன்னாரில் உள்ள மது விற்பனை நிலையமும் சுகாதார நடை முறைகளுக்கு அமைவாக திறக்கப்பட்டது.
ஆரம்பத்தில் பல நூற்றுக்கணக்கான மது பிரியர்கள் சுகாதார நடை முறைகளை மீறி மதுபான பொருட்களை கொள்வனவு செய்ய கூட்டம் கூடினர்.
இந்த நிலையில் சம்பவ இடத்திற்கு வந்த பொலிஸார் சுகாதார நடை முறைகளுக்கு அமைவாக மதுபானம் கொள்வனவு செய்ய நடவடிக்கைளை மேற்கொண்டனர்.
சுகாதார நடைமுறைகளை பின் பற்றி முகக்கவசம் அணிந்து சமூக இடை வெளியை கடை பிடித்து மதுபானம் கொள்வனவு செய்ய நடவடிக்கைகள் இடம் பெற்றது.
நீண்ட வரிசையில் நின்று மதுப்பிரியர்கள் மது பானப் பொருட்களை கொள்வனவு செய்தமையும் குறிப்பிடத்தக்கது.