மகள் ஒன்லைன் கிளாஸ் படிப்பதற்காக தந்தை குடிபிடித்து நிற்கும் புகைப்படம் தந்தையர் தினத்தையொட்டி வைரலாக பரவி வருகிறது. இது குறித்த முழு தகவல்களை கீழே காணுங்கள்.
கர்நாடக மாநிலம் தக்ஷிண கன்னடா மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்தவர் நாராயணா, இவரது மகள் 10ம் வகுப்பு படித்து வருகிறார். பொது தேர்விற்காக அவரது மகள் படித்து வரும் நிலையில், அந்த பள்ளியில் தற்போது கொரோனா பரவில் காரணமாக ஒன்லைன் வகுப்பு மட்டுமே நடக்கிறது. ஆனால் இவர் இருக்கும் கிராமத்தில் நெட்வொர்க் பிரச்சனை இருக்கிறது. மாணவர்கள் இன்டர்நெட் பிரச்சனை இருப்பதால் ஆன்லைன் வகுப்புகளை படிக்க முடியாமல் போகிறது.
இந்நிலையில் அவர் தனது மகளை ஊருக்கு வெளியே தினமும் நெட்வோர்க் கிடைக்கும் இடத்திற்கு கூட்டி சென்று ஆன்லைன் வகுப்புகளை படிக்க வைக்கிறார். இப்படியாக இவர் கூட்டிச்சென்ற போது மழை வந்துள்ளது. அதனால் அவர் தன் மகள் படிக்க வேண்டும் என்பதற்காக குடையை பிடித்துக்கொண்டு நின்று கொண்டிருந்தார். இதை அப்பகுதி வழியாக சென்ற மகேஷ் புச்சாப்பாடி என்ற பத்திரிக்கையாளர் பார்த்து தனது செல்போனில் படம் பிடித்து அதை தனது ட்விட்டர் பக்கத்தில் போட்டிருந்தார்.
இந்த புகைப்படம் தந்தையர் தினத்தில் மிக அதிகமாக வைரலாகியது. பலர் இந்த புகைப்படம் குறித்த விவாதங்களும் நடந்தது. பலர் தந்தையின் நல்ல குணத்தை பற்றி கூறினர். பலர் ஆன்லைன் கிளாஸ்கள் கூறித்து பேசினர். பல கிராமங்களில் இன்னும் நெட்வொர்க் கவரேஜ் இல்லாமல்இருப்பது குறித்து விவாதித்து வருகின்றனர்.
இது குறித்து அந்த புகைப்படத்தை எடுத்த பத்தரிக்கையாளர் மகேஷ் கூறும் போது அந்த சிறுமியின் கிராமத்தில் அடிக்கடி இப்படி மக்கள் நெட்வோர்க் தேடி வேறு இடத்திற்கு சென்று ஆன்லைன் கிளாஸ் படிப்பதை பார்க்கலாம். இன்னும் இந்தியாவில் பல இடங்களில் இன்டெர்நெட் சரிவர சென்று சேரவில்லை என்பதற்கு இதுவே சாட்சி என கூறினார்.