24.8 C
Jaffna
December 17, 2024
Pagetamil
சினிமா

பழங்குடியின மாணவர்கள் ஒன்லைன் வகுப்புகளைத் தொடர நிதி திரட்டும் மாளவிகா மோகனன்!

தற்போது கொரோனா உலகம் முழுவதும் மக்களின் வாழ்வாதாரத்தை பெரிதும் பாதித்துள்ளது. எனவே தனி மனிதர்களும் இயக்கங்களும் ஒன்றாக இணைந்து இந்த இக்கட்டான சூழலில் மக்களுக்கு உதவி செய்து மனிதத்தைக் காப்பாற்றி வருகின்றனர்.

தேவையான மருந்துகள் வழங்குவது, பொருளாதார உதவிகள் செய்வது, அவசிய தேவைகள் உணவுகள் வழங்குவது போன்ற பல உதவிகளை பொதுமக்களும் செல்வாக்கு படைத்தவர்களும் தேவைப்படுபவர்களுக்கு கொடுத்து உதவி வருகின்றனர்.

தற்போது நடிகை மாளவிகா மோகனனும் இதில் இணைந்துள்ளார். கேரளாவில் பழங்குடியினத்தைச் சேர்ந்த சிறுவர்கள் கல்வி கற்பதற்காக புதிய முன்னெடுப்பைத் துவங்கியுள்ளார்.

malavika-mohanan-helps

“இது 2015 ஆம் ஆண்டில் நான் முதன்முதலில் வயநாட்டில் உள்ள பழங்குடி மக்களைக் காணச் சென்றது முதல் எனது இதயத்திற்கு மிக நெருக்கமாக இருந்து வந்தது. அவர்கள் கல்வி கற்கவும், அவர்களுக்கு போதுமான அங்கீகாரம் கிடைக்கவும் நான் உதவ விரும்புகிறேன். அடிப்படை சுகாதார மற்றும் கல்வி வாய்ப்பு கூட இல்லாமல் வறுமையில் வாடும் இந்த சமூகத்தினருக்கு நான் உதவ விரும்பினேன்.

கேரளாவில் வயநாட்டின் இந்தப் பழங்குடிப் பகுதிகளில் உள்ள குழந்தைகள் கல்வி கற்பதற்காக இந்த நிதியை திரட்ட முயற்சிக்கிறேன். கேரளாவின் வயநாடு, ஒடப்பள்ளம் உயர்நிலைப் பள்ளி மாணவர்களுக்கு ஸ்மார்ட்போன்கள் மற்றும் மடிக்கணினிகள் தேவைப்படுகிறது., லாக்டவுன் அமல்படுத்தப்பட்டதால் அங்குள்ள 22 பழங்குடி சமூகங்களைச் சேர்ந்தவர்கள் தொடர்ந்து படிக்க ஒரே வழி ஆன்லைன் வகுப்புகள் மட்டுமே. உங்கள் நன்கொடைகள் மூலம், ஒவ்வொரு பழங்குடி சமூகத்திற்கும் குறைந்தது 1 லேப்டாப் & 1 ஸ்மார்ட்போனை நாங்கள் வழங்க முடியும், இது மொத்தம் 221 மாணவர்களுக்கு பயனளிக்கும். ஒவ்வொரு குழந்தைக்கும் ஒரு சாதனம் கிடைப்பதை உறுதி செய்வதே எங்கள் கனவு, ஆனால் 10 குழந்தைகளுக்கு 2 சாதனங்கள் கூட ஒரு சிறந்த தொடக்கமாகும் என்பதை நாங்கள் அறிவோம். நாங்கள் உங்களுக்கு நன்றிக்கடன்பட்டிருப்போம். நீங்கள் தானம் செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன். ஒவ்வொரு ரூபாயும் பயனளிக்கும்” என்று தெரிவித்துள்ளார்.

மாளவிகா மோகனனின் இந்த முன்னெடுப்பு மக்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்று வருகிறது.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

பிரபாஸ் படத்தில் ஒரு பாடலுக்கு ஆடுகிறாரா நயன்தாரா?

Pagetamil

‘சிவகார்த்திகேயன் 25’இல் ஜெயம் ரவி, அதர்வா, ஸ்ரீலீலா

Pagetamil

“கடந்த ஆண்டே எனக்கு திருமணம் ஆகிவிட்டது” – நடிகை டாப்ஸி

Pagetamil

‘ரஹ்மான் எனக்கு தந்தையைப் போன்றவர்’ – வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த மோஹினி தே

Pagetamil

‘புஷ்பா 2’ வில் இடம்பெற்றுள்ள ‘கிஸ்ஸிக்’ பாடல் நவ.24 இல் வெளியீடு

Pagetamil

Leave a Comment