தயாரிப்பாளர் கலைப்புலி எஸ் தாணு விஜய் பிறந்தநாளை முன்னிட்டு ஸ்பெஷல் மோஷன் போஸ்டர் ஒன்றைப் பகிர்ந்துள்ளார்.
நாளை (ஜூன் 22) விஜய்யின் பிறந்தநாள் என்பதால் அவரது ரசிகர்கள் கடந்த சில நாட்களாகவே சமூக வலைத்தளங்களைத் திக்குமுக்காட செய்து வருகிறார். விதவிதமான போஸ்டர்கள், பதிவுகள் என சமூக வலைத்தளங்கள் திருவிழாக் கோலம் தான்.
தற்போது விஜய் பிறந்தநாளுக்காக ரசிகர்கள் உருவாகியுள்ள ஸ்பெஷல் மோஷன் போஸ்டர் ஒன்றை தயாரிப்பாளர் கலைப்புலி எஸ் தாணு பகிர்ந்துள்ளார். அந்த மோஷன் போஸ்டரில் விஜயின் சூப்பர் ஹிட் படங்களின் புகைப்படங்கள் இடம் பெற்றுள்ளன. பார்ப்பதற்கு பிரம்மாண்டாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த மோஷன் போஸ்டர் தற்போது வைரலாகி வருகிறது. ஏற்கனவே விஜய்க்காக ஸ்பெஷலாக வடிவமைக்கப்பட்ட வாட்ஸ்அப் ஸ்டேட்டஸை தாணு வெளியிட்டிருந்தார்.
இன்று தளபதி 65 படத்தின் இயக்குனர் நெல்சன் திலீப்குமாரின் பிறந்தநாள் என்பதால் இன்று மாலை 6 மணிக்கு தளபதி 65 படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் விஜய் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர். மேலும் சில அப்டேட்களும் நாளை வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.