பிக் பாஸ் கவின் தற்போது இயக்குனர் நெல்சனுக்கு உருக்கமாக பிறந்தநாள் வாழ்த்து கூறி ட்விட்டரில் பதிவிட்டு உள்ளார்.
பிக் பாஸ் மூன்றாம் சீசனில் போட்டியாளராக கலந்துகொண்டவர் கவின். அவர் ஒரே நேரத்தில் பலரிடம் கடலை போடுகிறார் என விமர்சனம் எழுந்த நிலையில், போட்டியில் அவருக்கே அது பிரச்சனையாக மாறியது. அவர் சாக்ஷி அகர்வாலுடன் நெருக்கமாக இருந்துவிட்டு அவரிடம் இருந்து திடீரென விலகி லாஸ்லியாவை காதலிப்பதாக கூறினார். அதனால் ஏற்பட்ட பிரச்சனைகள் உலகம் அறிந்தது.
பிக் பாஸுக்கு பிறகு திருமணம் செய்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்பட்ட கவின் மற்றும் லாஸ்லியா இருவரும் வெளியில் வந்த பிறகு பிரிந்துவிட்டனர்.
இந்நிலையில் கவின் ‘உங்களுக்காக உயிரையும் தருவேன்’ என சொல்லி இருக்கிறார். ஆனால் அது லாஸ்லியாவுக்காக இல்லை. இயக்குனர் நெல்சன் திலீப் குமாருக்காக தான் அவர் இப்படி உருகி இருக்கிறார்.
கோலமாவு கோகிலா, டாக்டர் படங்களை தொடர்ந்து தற்போது தளபதி65 படத்தை இயக்கி வருகிறார் நெல்சன் என்பது குறிப்பிடத்தக்கது. அவருக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறிய கவின் தான் இப்படி கூறி இருகிறார்.
“என்னுடைய மீதம் இருக்கும் வாழ்க்கையை ஒருவருக்கு கொடுத்துவிட முடியும் என்கிற option இருந்தால் நாள் மகிழ்ச்சியாக உங்களுக்கும் உங்களது குடும்பத்திற்கும் கொடுத்துவிட்டு சென்றுவிடுவேன். நீங்கள் எனக்கு கொடுத்த அன்பு அந்த அளவிற்கானது. அனைத்திற்கும் நன்றி அண்ணே.”
“உங்களது அடுத்த படிப்பிற்காக நான் ஆவலுடன் காத்திருக்கிறேன். ஹாப்பி பிறந்த நாள், இந்த பிறந்தநாள் வேற மாதிரி இருக்க போகிறது” என கவின் கூறியுள்ளார்.