போன்களை பாதிக்கும் ‘ஜோக்கர்’ மால்வேர் எனப்படும் தீம்பொருள் கடந்த மூன்று ஆண்டுகளாக கூகிள் பிளே ஸ்டோரின் பல பயன்பாடுகளை பாதித்து வருகிறது. அந்த வரிசையில் இந்த தீம்பொருள் இப்போது மேலும் எட்டு புதிய பயன்பாடுகளிலும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது, குயிக் ஹீல் செக்யூரிட்டி லேப்ஸ் எனும் ஆய்வக நிறுவனம் இதை கண்டறிந்து தெரிவித்துள்ளது. இந்த ஜோக்கர் தீம்பொருள் ஒரு ஆப் மூலம் பயனரின் சாதனத்தில் நுழையும் என்றும், அப்படி நுழைந்த பிறகு ரகசியமாக அது தரவை சேகரிக்க தொடங்கும் என்றும் கூறப்படுகிறது.
இந்த தீம்பொருள் பயனரின் அனுமதியின்றி போனில் உள்ள ஏதேனும் சேவைகளின் பிரீமியம் சந்தாக்களுக்கு கட்டணம் செலுத்தக்கூடும்.
Auxiliary Message, Fast Magic SMS, Free CamScanner, Super Message, Element Scanner, Go Messages, Travel Wallpapers, and Super SMS ஆகிய 8 செயலிகள் தான் இந்த தீம்பொருளால் பாதிக்கப்பட்டுள்ளன.
தீம்பொருளால் இந்த 8 பயன்பாடுகள் பாதிக்கப்பட்டதாக கண்டறியப்பட்டதை அடுத்து கூகிள் இந்த பயன்பாடுகளை பிளே ஸ்டோரிலிருந்து விரைந்து நீக்கியுள்ளது. இருப்பினும், இந்த பயன்பாடுகளில் ஏதேனும் ஒன்றை நீங்கள் ஏற்கனவே பதிவிறக்கம் செய்து உங்கள் போனில் இன்ஸ்டால் செய்து இருந்தால், உங்கள் சாதனம் மற்றும் தனியுரிமை பாதிப்படையும் என்பதால் உடனே அதை Uninstall செய்து விடுங்கள்.