இந்தியாவில் கொரோனா நிலவரம்- புதிதாக 53,256 பேருக்கு தொற்று

Date:

இந்தியாவில் கொரோனா வைரசின் 2ம் அலை கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்திய நிலையில், தற்போது வைரஸ் பரவல் வெகுவாக குறைந்துள்ளது. குணமடைவோரின் எண்ணிக்கையும் உயர்கிறது. பாதிப்பு குறைந்ததையடுத்து ஊரடங்கு கட்டுப்பாடுகளை தளர்த்தப்பட்டு இயல்புநிலைக்கு திரும்புகின்றன. அதேசமயம் உயிரிழப்பு ஏற்ற இறக்கமாக உள்ளது.

இந்நிலையில், இந்தியாவில் கொரோனா பாதிப்பு நிலவரம் குறித்து மத்திய சுகாதார அமைச்சகம் அறிக்கை வெளியிட்டுள்ளது. அதன்படி இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 53,256 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மொத்த பாதிப்பு 2,99,35,221 ஆக உயர்ந்துள்ளது.

நாடு முழுவதும் ஒரே நாளில் 1422 பேர் கொரோனாவுக்கு பலியாகி உள்ளனர். இதன்மூலம் கொரோனா வைரசால் இதுவரை உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 3,88,135 ஆக உயர்ந்துள்ளது.கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 2,88,44,199 ஆக உயர்ந்துள்ளது. நேற்று ஒரே நாளில் 78,190 பேர் குணமடைந்துள்ளனர்.

நாடு முழுவதிலும் உள்ள பல்வேறு மருத்துவமனைகளில் 7,02,887 பேர் சிகிச்சை பெற்றுவருகின்றனர். நாடு முழுவதும் நேற்று வரை பொதுமக்களுக்கு 28,00,36,898 டோஸ்கள் தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

spot_imgspot_img

More like this
Related

கனடா பொருட்களுக்கு 50% வரி விதிக்கும் ட்ரம்ப்

அடுத்த மாதம் முதல் பல்வேறு கனேடியப் பொருட்கள் மீது அமெரிக்கா கூடுதலாக...

சவுதி மீது கடல்வழி முற்றுகையை அறிவித்த ஹூதிகள்: அமெரிக்காவுக்கு பதிலடி கொடுக்கும் ஈரான்!

தொடர்ந்து ஒன்பதாவது நாளாக அமெரிக்கா ஈரான் மீது தாக்குதல்களை நடத்தியதைத் தொடர்ந்து,...

ஹூதிகளின் கடல்வழி முற்றுகையை கடுமையாக சாடிய சவுதி!

ஈரான் ஆதரவு ஹூதி போராளிக் குழு, சவூதி அரேபியாவிற்கு எதிராகக் கடற்படை...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்